சிங்கம் கனவில் வந்தால் என்ன பலன் | Lion Dream Meaning in Tamil

Advertisement

கனவில் சிங்கம் வந்தால் என்ன பலன் | Singam Kanavil Vanthal Enna Palan

Lion Kanavil Vanthal Enna Palan: பொதுநலம்.காம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் மகிழ்வான வணக்கங்கள்..! இரவில் அனைவருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒன்றுதான். நாம் காணும் கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளன. அனைவருக்கும் கனவுகளானது ஒரே மாதிரியாக வருவதில்லை. இறப்பு, திருமணம், விலங்குகள், குழந்தை, ஆன்மீகம் பற்றிய பல விதமான கனவுகள் தோன்றும். அந்த வகையில் நம்முடைய இந்த பதிவில் கனவில் சிங்கம் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளுவோம்..!

குதிரை கனவில் வந்தால் என்ன பலன்

கனவில் சிங்கம் கர்ஜித்து உங்களை விரட்டுவது போல வந்தால் என்ன பலன்:

சிங்கம் கனவில் உங்களை கர்ஜித்து விரட்டுவது போல் வந்தால் நீங்கள் செய்யும் செயலில் முழு முயற்சியுடன் ஈடுபட்டாலும் அதில் வெற்றி அடையாமல் தோல்வியை சந்திப்பீர்கள் என்று அர்த்தம்.

கனவில் சிங்கத்துடன் சண்டை போடுவது போல் வந்தால் என்ன அர்த்தம்:

சிங்கத்துடன் கனவில் சண்டை போடுவது போன்று வந்தால் உங்கள் தொழிலில் ஏற்படக் கூடிய சிறப்பான வளர்ச்சியையும், சவால்களையும் நீங்கள் எதிர்கொண்டு வெற்றி கொள்வதையும் குறிக்கிறது.

சிங்கத்துடன் சண்டையிட்டு வெற்றி அடைவது போன்று கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் சிங்கத்திடம் சண்டையிட்டு வெற்றி பெறுவது போல் வந்தால் எதிர்காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய எந்த வேலையிலும் பெரிய வெற்றி அடைய போகிறீர்கள் என்று இந்த கனவானது உணர்த்துகிறது.

சிங்கத்தால் கடிக்க போவது போன்று கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் ஒரு சிங்கத்தால் கடிக்க போவது போல கனவு கண்டால் உங்களுக்கு எதிர்காலங்களில் வரக்கூடிய கஷ்டங்களை எளிதில் சமாளித்து வருவீர்கள். உங்களுடைய பகைவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் உங்களை தோற்கடிக்க முடியாது என்பதையும் குறிக்கிறது.

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்

கனவில் சிங்கத்தை வேட்டையாடுவது போல கண்டால் என்ன பலன்:

சிங்கத்தை கனவில் வேட்டையாடுவது போல் வந்தால் இனி வரும் காலங்களில் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடிய பகைவர்களை தோற்கடித்து வெல்ல போகிறீர்கள் என்று அர்த்தம்.

சிங்கம் மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கனவில் சிங்கத்தின் மீது ஏறி சவாரி செய்வது போன்று உங்களுடைய கனவில் வந்தால் எதிர்காலங்களில் உண்டாகக்கூடிய கஷ்டங்களை நீங்கள் உங்களுடைய மன தைரியத்தாலும், விடாமுயற்சியாலும் தாண்டி வெற்றி பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் புகழுடன் நல்ல செல்வத்தையும் சேர்ப்பீர்கள் என்பதையும் குறிக்கிறது.

கனவில் சிங்கம் கர்ஜிப்பது போல் வந்தால் என்ன பலன்:

சிங்கம் கனவில் கர்ஜிப்பது போல் வந்தால் உங்களுடைய வீட்டை நீங்கள் நன்றாக பராமரிப்பவர்கள் என்று அர்த்தம். உங்களுடைய கணவரிடம் நீங்கள் அதிகாரம் செலுத்துபவராக இருப்பீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.

கனவில் ஒரு சிங்கம் கர்ஜிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

உங்களுடைய கனவில் ஒரு சிங்கம் கர்ஜிப்பது போல கண்டால் உங்களுடைய பகைவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக உயர்ந்த நிலையில் இருப்பார் என்று அர்த்தம். இருந்தாலும் வாழ்க்கையில் நீங்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நன்றாக யோசித்து அதை சுமூகமாக தீர்ப்பீர்கள் என்பதையும் குறிக்கிறது. அது மட்டுமில்லாமல் உங்கள் பகைவரிடம் சுமூகமான உறவு மேம்படும் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறீர்கள் என்பதையும் இந்த கனவு கூறுகிறது.

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement