Liquorice Powder in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்று என் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். சரி நீங்கள் அதிமதுரத்தை பார்த்திருக்கிறீர்களா..? இது என்ன கேள்வி என்று கேட்பீர்கள். ஆனால் அதிமதுரத்தை பார்த்திருந்தால் மட்டும் போதுமா..? அதிமதுரம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டாமா..? அதனால் இன்றைய பதிவின் வாயிலாக அதிமதுரம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
அதிமதுரம் பற்றிய தகவல்கள்:
பொதுவாக நாம் அனைவருமே அதிமதுரத்தை பார்த்திருப்போம். அது ஒரு மூலிகை பொருள் என்றே சொல்லலாம். இந்த அதிமதுரம் சேர்த்து தயாரிக்காத மருத்துவ பொருட்களே கிடையாது. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதற்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய பெயர்கள் உண்டு. மேலும் இதில் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் இதில் ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் ஆங்கில பெயரால் அழைக்கப்படுகிறது.
Red ஆப்பிள் பார்த்திருக்கிறேன் அதென்ன Green ஆப்பிள்.. வாங்க தெரிந்து கொள்வோம் |
இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளமாக இருக்கிறது. அதிமதுரம் அல்லது முலேத்தி “ஸ்வீட்வுட்” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த மருத்துவ மூலிகையாகும். இதன் வேர் நறுமணமானது மற்றும் தேநீர் மற்றும் பிற பானங்களில் சுவையூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த அதிமதுரத்தின் வேரை தூளாக செய்து அந்த பவுடரை அதிகமாக மருத்துவ பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
சங்கு பூவை பார்த்திருக்கிறீர்களா.. அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள் |
அதிமதுர தூளின் பயன்கள்:
அதிமதுரத்தில் இருக்கும் பண்புகள் கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.
மேலும் இது காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது. அதுபோல இது நரம்புத் தளர்ச்சியை போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்சனைகளை சரி செய்யவும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படுகிறது. மேலும் அதிமதுரத்தில் ஒளிந்திருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்
சரி இப்போது அதிமதுரத்தின் நன்மைகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதில் இருக்கும் தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டாமா..? என்னது தீமைகளா என்று ஆச்சர்யமாக கேட்பீர்கள். ஆமாம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிமதுரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன் தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 அதிமதுரத்தால் ஏற்படும் தீமைகள் என்ன
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |