வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாமை அரிசியினை சேர்ப்பதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Updated On: November 22, 2024 1:17 PM
Follow Us:
little millet in tamil
---Advertisement---
Advertisement

Little Millet in Tamil

நாம் அனைவரும் சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை மற்றும் பூரி, பரோட்டா என இதுபோன்ற உணவுகளை தான் வீட்டிலும் சரி ஹோட்டலிலும் சரி சாப்பிடுகிறோம்.  இத்தகைய உணவுகள் நமக்கு சாப்பிடுவதற்கு நமக்கு ருசியாக இருந்தாலும் கூட நம்முடைய தேவைப்படும் போதியளவு சத்துக்கள் இதில் காணப்படுவது இல்லை. ஆனால் நம் முன்னோர்கள் இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் திணை வகைகளில் உள்ள கம்பு, வரகு அரிசி, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் மக்காசோளம் என இவற்றை தான் உணவாக எடுத்து கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இன்றைய காலத்தில் உள்ளவர்களுக்கு இதனை பற்றிய பெரும்பாலான தகவல்கள் சரியாக தெரியாமல் இருப்பதனால் இன்றைய பதிவில் சாமை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

சாமை பற்றிய தகவல்கள்:

 information about little millet in tamil

நாம் நமக்கு தெரிந்த 9 வகை திணைகளில் சாமையும் ஒன்றாக உள்ளது. இது ஒரு மூலிகை தாவரமாகவும் உள்ளது. மேலும் இது வருடத்திற்கு ஒரு முறை பயிரிடப்படும் திணை வகை ஆகும்.

அதேபோல் சாமை ஆனது அதிகமாக இந்தியாவில் புன்செய் நிலத்தில் தான் பயிரிடப்படுகிறது. இத்தகைய சாமை உணவிற்கு மட்டும் இல்லாமல் புட்டு, பிஸ்கட் மற்றும் கேக் என இவற்றையும் தயாரிப்பதற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.

சாமை பொதுவாக நேராக சற்று வளைந்து காணப்படும். இதனுடைய உயரம் என்பது தோராயமாக 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. அதேபோல் இந்த சாமை அடர் மஞ்சள் நிறத்திலும் வட்ட வடிவில் 1.8 மி.மீ முதல் 1.9 மி.மீ வரை உயரத்துடன் காணப்படும்.

மேலும் சாமை இந்தியா மட்டும் இல்லாமல் சீனா, கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் காகசஸ் என இத்தகைய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.

  • குடும்பம்: Poaceae
  • திணை: தாவரம்
  • இனம்: பேனிகம்
  • பேரினம்: Panicum
  • ஆங்கில பெயர்: Little Millet

வரகு அரிசியை சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள் 

சாமை அரிசியின் பொதுவான பெயர்கள்:

மொழி  பெயர்கள்
இந்தி குட்கி
குஜராத்தி கஜ்ரோ
பெங்காலி சாமா
தெலுங்கு சமலு
மராத்தி சாவா
கன்னடம் சாமே
மலையாளம் சாமே
தமிழ் சாமை
ஒரியா சுவான்

 

சாமை அரிசி சத்துக்கள்:

 சாமை அரிசி சத்துக்கள்

  1. மெக்னீசியம்
  2. சோடியம்
  3. பொட்டாசியம்
  4. காப்பர்
  5. புரதச்சத்து
  6. கொழுப்புச்சத்து
  7. துத்தநாகம்
  8. நார்சத்து
  9. மாங்கனீசு
  10. பாஸ்பரஸ்
  11. கால்சியம்
  12. இரும்புசத்து
  13. கார்போஹைட்ரேட்
  14. வைட்டமின் B6

மேலே கூறியுள்ள சத்துக்கள் அனைத்தும் சாமை அரிசியில் அடங்கியுள்ளது.

தினை வகைகள் மற்றும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now