Lovers Day Dress Code in Tamil
காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது அன்றைய தினமில் விதமான உடையை அணிய நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். நீங்கள் அணியும் ஒவ்வொரு உடைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பது காதலர்களுக்குள் மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் ஆகும்.
நீங்கள் புதிதாக காதலிப்பதாக இருந்தால் காதலர் தினத்தில் அணியும் ஒவ்வொரு நிறத்திற்கும் எஎன்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதனை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள். படித்து அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள் நிறம் 💛:
காதலர் தினத்தன்று மஞ்சள் நிறத்தில் உடை அணிந்துகொண்டால் அவர்களுக்கு காதல் தோல்வி. இனிமேல் காதலிக்கும் ஐடியா இல்லை என்று அர்த்தம் ஆகும்.
பச்சை நிறம் 💚:
நீங்கள் பச்சை நிறத்தில் உடை அணிந்து கொண்டால் நீங்கள் காதலிக்க தயாராக இருக்குறீர்கள் என்றும், நீங்கள் காதலை சொல்ல ஒருவருக்காக காத்துகொண்டு இருக்குறீர்கள் என்றும் அர்த்தம்.
வெள்ளை நிறம் 🤍:
வெள்ளை பொதுவாக அமைதியின் சின்னமாக பார்க்கப்படுகிறது ஆக நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடையை அணைந்துகொண்டீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றும், அவருடன் விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்பதை இந்த வெள்ளை நிறம் உணர்த்துகிறது.
நீல நிறம் 💙:
நீல நிறத்தை காதலர் தினம் அன்று அணிந்துகொண்டால் நீங்கள் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு காதலர் யாரும் இல்லை, என்னை அணுகலாம் என்பதை குறிக்கும் நிறம் தான் நீல நிறம்.
ரோஸ் நிறம் 🩷:
றோஸ் நிறத்திற்கு காதலர் தினத்திற்கு முக்கியம் இடம் இருக்கிறது. காரணம் நீங்கள் காதலர் தினத்தன்று உங்களுடைய காதலை ஏற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம். ஆக வேறு யாரும் எனக்கு காதலை தெரிவிக்க வேண்டாம் என்பதை இதன் மூலம் உணர்த்தலாம்.
சிவப்பு நிறம் ❤️:
காதலின் அடையாள நிறமாக சிவப்பு நிறம் சொல்லப்படுகிறது. ஆக இந்த சிவப்பு நிறத்தில் நீங்கள் ஆடை அணிந்துகொடல் நீங்கள் அன்புமிக்க காதலரோடு சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
ஆரஞ்ச் நிறம் 🧡:
ஆரஞ்ச் நிறத்தை அணிந்து கொண்டு சென்றீர்கள் என்றால் நீங்கள் யாரோ ஒருவருக்கு காதலை சொல்ல போறீங்கன்னு அர்த்தம்.
கிரே நிறம் 💜:
காதல் குறித்து எந்த ஐடியாவும் இல்லை, விருப்பமும் இல்லை. வீட்டில் சொல்பவரை திருமணம் செய்யும் குணமுடையவர் என்று அர்த்தம்
கருப்பு நிறம் 🖤:
கருப்பு நிறம் பொதுவாக எதிர்ப்பின் நிறமாக பார்க்கப்படுகிறது. ஆக நீங்கள் இந்த நிறத்தில் உடை அணிந்துகொண்டீர்கள் என்றால் நீங்கள் காதலை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிடம் யாரும் காதலை தெரிவிக்க வேண்டாம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.
பிரௌன் 🤎:
இந்த பிரவுன் நிறத்தில் உடையை அணிந்து கொண்டால் நீங்கள் மனரீதியாக உடைந்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஒன்று சமீபத்தில் உங்கள் நீண்ட நாள் காதல் முறிந்திருக்க வேண்டும் அல்லது என்றோ முறிந்த காதலை நினைத்து சோகத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.காம் |