வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாசில் வீணையும் பாடல் வரிகள்

Updated On: July 17, 2023 6:42 AM
Follow Us:
maasil veenaiyum lyrics in tamil
---Advertisement---
Advertisement

மாசில் வீணையும் வரிகள்

நம்மிடம் சிறுவயதிலிருந்தே கதைகள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் நாம் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கதைகளை அழகாக சொல்லி தருவார்கள். மேலும் நம் வீட்டில் தாத்தா, பாட்டி யாரும் இருந்தார்கள் என்றால் அவர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டு கொண்டே இருப்போம். அவர்களும் தினந்தோறும் கதைகளை சலிக்காமல் கதைத்து கொண்டே இருப்பார்கள். ஆனால் நமக்கு கதைகள் மட்டும் தான் தெரியும். அந்த கதையை யார் எழுதினார், அந்த கதையில் வரும் பாடல்கள் போன்றவற்றை பற்றி நமக்கு தெரிந்திருக்காது. அரசு தேர்வுகளை தேர்வுகளை எழுதுபவர் கண்டிப்பாக இந்த விஷயங்கள் எல்லாம் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதவில் மாசில் வீணையும் வரிகள் பற்றியும் அவற்றை யார் எழுதினார் என்பதையும் தெரிந்து கொள்வோம் வாங்க..

மாசில் வீணையும் வரிகள்:

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே

நமச்சி வாயவே
ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
நானறி விச்சையும்
நமச்சி வாயவே
நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
நன்னெறி காட்டுமே.

ஆளா காராளா
னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து
மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை
யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண்
ணாகிக் கழிவரே.

நடலை வாழ்வுகொண்
டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது
சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு
துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்
தூர்முனி பண்டமே.

பூக்கைக் கொண்டரன்
பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன்
நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை
தேடி அலமந்து
காக்கைக் கேயிரை
யாகிக் கழிவரே.

குறிக ளுமடை
யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர்
நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம்
ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன
மென்கொல் புகாததே.

வாழ்த்த வாயும்
நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந்
தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர்
தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை
யேன்நெடுங் காலமே.

எழுது பாவைநல்
லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்
றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி
யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி
தென்படு கின்றதே.

நெக்கு நெக்கு
நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன்
னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர்
பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப
ரவர்தம்மை நாணியே.

விறகிற் றீயினன்
பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்
டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக்
கடையமுன் னிற்குமே.

சூரிய பகவான் ஸ்லோகம் மற்றும் 108 போற்றி..!

சனி பகவான் 108 போற்றி

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now