தந்தை மகன் திருக்குறள் | Magan Thanthaikku Atrum Uthavi Thirukural..!

Advertisement

தந்தை மகன் திருக்குறள் | Magan Thanthaikku Atrum Uthavi Thirukural..!

நம்முடைய வாழ்க்கையினை மிகவும் சுருக்கமாக வெறும் ஒன்றரை அடியில் திருக்குறள் வாயிலாக கூறியவர் தான் திருவள்ளுவர். திருக்குறளில் மொத்தம் 1330 குறளும், 130 அதிகாரங்களும் உள்ளது.  அதுமட்டும் இல்லாமல் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் என மூன்று பிரிவுகளாகவும் உள்ளது. இவ்வளவு சிறப்புக்களை கொண்டுள்ள திருக்குறளை நாம் சிறு வயதில் படித்ததோடு சரி அதன் பிறகு திருக்குறை படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட அதை நாம் அப்படியே விட்டு விடுகின்றோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கு ஏற்றவாறு எண்ணற்ற குறள்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் அத்தகைய திருக்குறளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. எனவே இன்று தந்தை மகன் திருக்குறளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

தந்தை மகன் ஆற்றும் உதவி திருக்குறள்:

குறள்- 1

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

மு.வ விளக்க உரை:

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

கலைஞர் விளக்க உரை:

“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

குறள்- 2

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மு.வ விளக்க உரை:

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

கலைஞர் விளக்க உரை:

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள்

குறள்- 3

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

மு.வ விளக்க உரை:

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

கலைஞர் விளக்க உரை:

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

குறள்- 4

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

மு.வ விளக்க உரை:

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

கலைஞர் விளக்க உரை:

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

குறள்- 5

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.

மு.வ விளக்க உரை:

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

கலைஞர் விளக்க உரை:

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்
20 எளிமையான திருக்குறள்
50 easy thirukkural in tamil
கல்வி திருக்குறள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement