Maha Sangadahara Sathurthi Date 2024 in Tamil | மஹா சங்கடஹர சதுர்த்தி 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு 2024 மஹா சங்கடஹர சதுர்த்தி எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முழுமுதற்கடவுளான விநாயகர் பெருமானை வழிபடுவதற்கு உகந்த திதி சதுர்த்தி திதியாகும். விநாயகர் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதியில் தான் அவதரித்தார். எனவே, விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திக்கு முன்பு தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மஹாசங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம்.
மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும் நீங்கி விடும். எனவே, இந்த ஆண்டு 2024 மஹா சங்கடஹர சதுர்த்தி எப்போது வருகிறது.? விநாயக பெருமானை வழிப்பட உகந்த நேரம் எப்போது.? உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா
மஹா சங்கடஹர சதுர்த்தி 2024 தேதி மற்றும் நேரம்:
இந்த ஆண்டு ஆவணி மாத மஹாசங்கடஹர சதுர்த்தி, ஆங்கில தேதிக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், தமிழ் தேதிக்கு ஆவணி 06 ஆம் தேதியும் வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் மாலை 06.14 PM மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்கி மறுநாள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மதியம் 03.48 PM வரை சதுர்த்தி திதி உள்ளது.எனவே, ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து மாலை 06 மணிக்கு மேல், கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, தேங்காய் உடைத்து வழிபடலாம். அதேபோல், வீட்டில் பூஜை செய்பவர்கள் விநாயக பெருமானுக்கு அவள், கொழுக்கட்டை, சுண்டல், பூ, பழம் வைத்து வழிபடலாம்.
விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்நாளில், விநாயகரை வழிபட்டால் சந்திர தோஷம் ஏற்படாது. மேலும், ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால் நீங்கும் என்பது ஐதீகம். மஹாசங்கடஹர சதுர்த்தி நாளில், விரதம் இருக்க முடியாதவர்கள் சூரியன் அஸ்தமனம் ஆகி, சந்திரன் தோன்றிய பிறகு, விநாயக பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வணங்க கூறும் மந்திரம்….
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |