மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi Essay in Tamil..!
வருடங்கள் என்பது எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் எத்தனை வருடம் ஆனாலும் கூட அதில் நமக்கு என்றும் நினைவிற்கு வரக்கூடிய சில நிகழ்வுகள் என்பது இருக்கும். அப்படி பார்த்தால் நாம் அனைவருக்கும் நம்முடைய பிறந்தநாள் நன்றாகவே நினைவில் இருக்கும். அதற்கு அடுத்த நிலையாக நமது வீட்டில் உள்ளவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு என இவர்களுக்கும் நினைவு இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மாறாக ஒருவரின் பிறந்தநாளை நாம் யாரும் மறப்பது இல்லை. அது வெறும் கிடையாது மஹாத்மா காந்தி அவர்கள் மட்டுமே. வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் வருவதனால் அதனை சிறப்பிக்கும் வகையில் மஹாத்மா காந்தி அவர்களின் கட்டுரையினை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Mahatma Gandhi Essay in Tamil:
முன்னுரை:
நம் இந்திய நாட்டிற்கு எப்படியாவது சுதந்திரம் வாங்கியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடிய வீரர்களில் ஒருவரே மஹாத்மா காந்தி அவர்கள். காந்தி அவர்கள் அகிம்சை முறையினை பின்பற்றியே நாட்டிற்கு சுதந்திரம் பெற்றார். ஆடம்பர வாழ்க்கையினை வாழ விரும்பாமல் எளிமையான வாழ்க்கையினை வாழ்ந்துவரும் இவரே.
பிறப்பு மற்றும் கல்வி:
1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2-ஆம் நாள் அன்று குஜராத் மாநிலத்திலுள்ள போர் பந்தர் என்னும் ஊரில் காந்தி அவர்கள் பிறந்தார். பெற்றோர் பெயர் தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் அம்மையார் ஆகும். அதன் பிறகு தனது 12-வது வயதில் கஸ்தூரி பாய் என்ற பெண்ணையும் மனம் முடித்தார்.
அதன் பிறகு காந்தி அவர்கள் 19-வது வயதில் பாரிஸ்டர் படிக்கச் சென்றார்.
வழக்கறிஞர் பணி:
பாரிஸ்டருக்கு 19 வயதில் சென்ற காந்தி அவர்கள் படிப்பினை சிறந்த முறையில் அங்கு வழக்கறிஞர் பட்டமும் பெற்று மும்பையிலேயே பணியும் செய்தார். இதனை தொடர்ந்து இந்திய நிறுவனத்தின் உதவியுடன் 1893-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இவரது பணியினை தொடங்கினார். பின்பு 1914-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து எப்படியாவது இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கருதி தனது பணியினை ராஜினா செய்து இந்தியா வந்து சேர்ந்தார்.
மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள் |
மகாத்மா காந்தியின் போராட்டங்கள்:
இந்தியா வந்து சேர்ந்த காந்தி அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டார். அதாவது உப்பு சத்திய கிரகம், வெள்ளையனே வெளியேறு மற்றும் ஒத்துழையாமை இயக்கம் என இத்தகைய போராட்டங்களை எல்லாம் செய்தார்.
ஒத்துழையாமையை இயக்கத்தின் மையமாக இனி பிரிட்டிஷ் பொருட்கள் எதுவும் இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று எண்ணி 1920-ஆம் ஆண்டு இந்த போராட்டத்தினை தொடங்கினார்.
அதேபோல் 1930-ஆம் ஆண்டில் தண்டிக்கு நடந்தே சென்று ஆங்கிலேயர் விதித்த விதிக்கு மாறாக உப்பு உற்பத்தினையும் செய்தார். பல விதமான போராட்டங்களை செய்து கூட அவர் ஒரு நாள் அகிம்சை தவறாமல் நேர்மையுடன் மட்டுமே செய்யப்பட்டார்.
காந்தியின் சமூக நீதி:
இவர் வழக்கறினராக பணியாற்றிய போதிலும் சரி, அஹிம்சை முறையில் பணியாற்றிய போதும் சரி நேர்மையினை கடைப்பிடித்தார். மேலும் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக போராட ஆரம்பித்தார். அதேபோல் அனைத்து மக்களுக்கு ஒன்று என எண்ணி சாதி, மத வேறுபாடுகளை தவிர்த்தார்.
முடிவுரை:
காந்தி அவர்கள் பல விதமான போராட்டங்களை மேற்கொண்டு 1947-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று இந்தியாவிற்கு சுதந்திரத்தினையும் பெற்றுக்கொடுத்தார். 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் நாளன்று கோட்சா என்ற ஒரு நபரால் சுட்டுக்கொல்லப்பட்டு மரணம் அடைந்தார்.
ஆகவே இந்தியாவில் இவர் இறந்த நாளை தியாகிகள் நாளாகவும், இவரது பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |