மகாத்மா காந்தியின் கவிதைகள் | Mahatma Gandhi Kavithai in Tamil..!

Advertisement

மகாத்மா காந்தியின் கவிதைகள் |Mahatma Gandhi Kavithai in Tamil

பொதுவாக மனிதர்களாகிய நம்முடன் யார் ஒருவர் நெருங்கி பழகி இருந்தாலும் அவரை எளிதில் மறப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும். அந்த வகையில் நாம் பிறக்கும் காலத்தில் அவர் இல்லை என்றாலும் கூட காலங்கள் தோறும் பேசும் வகையில் அவரது புகழும், அயராத பற்றும் இருக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பிற்கு உரியவர் வேறு யாரும் இல்லை மகாத்மா காந்தி அவர்கள் மட்டுமே. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சுதந்திரம், எளிமையான வாழ்க்கை மற்றும் வெள்ளையனே வெளியேறு, அக்டோபர் 2 என இவை அனைத்தினையும் கூறும் போது முதலில் நியாபகம் வருவது மஹாத்மா காந்தி அவர்கள் மட்டுமே. அந்த வகையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் ஆனது அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வருகிறது. எனவே அதனை சிறப்பிக்கும் வகையில் காந்தியின் கவிதை வரிகளை பார்க்கலாம் வாங்க..!

காந்தி பற்றிய கவிதை:

தேசியக்கொடியின்
அசோகச் சக்கரத்திற்கு
அச்சாணி நீ

Gandhi Kavithai in Tamil:

வீட்டுக் காக வாழ்ந்தார் எல்லாம்
வீழ்ந்தே மறைந்தார் மண்ணிலே !- நம்
நாட்டுக் காக வாழ்ந்த அண்ணல்
நாளும் வாழ்கிறார் நம்மிலே !

அரையாய்க் குறைந்த ஆடை அணிந்தார்
அண்ணல் காந்தி நாட்டிலே !- எங்கும்
விரைந்து சென்றே அமைதி வழியை
விதைத்து வந்தார் விரும்பியே !

நாட்டில் பலவாம் போராட்டங்கள்
நடத்தி வந்தார் நாளுமே !- பல
வாட்டும் இன்னல் வளைத்த போதும்
வருந்தார் எதிர்த்தார் வணங்கியே !

அமைதி அன்பு வழியே எங்கும்
அணிவகுத்தார் கூடியே !- துயர்
அமைதி குலைத்தே அடக்கிப் பார்த்தும்
அடங்க மறுத்தார் அடங்கியே !

அடக்கி ஒடுக்கி ஆண்டவர் எல்லாம்
அடங்கிப் போனார் தன்னாலே !- அவர்
அடங்கி ஒடுங்கி அண்ணல் இடத்தில்
அளித்தார் விடுதலை அந்நாளே !

உலகம் போற்றும் அமைதி வழியை
உயர்த்தி வைத்தார் நம்அண்ணல் !- இந்த
உலகம் இன்றும் என்றும் போற்றும்
உயர்வே பெற்றார் நம்அண்ணல் !

காந்தி வழியே கண்கள் இரண்டாய்க்
காப்போம் அதுவே வாழ்நியதி !- நம்
காந்தி வழியே உலகம் வாழ்ந்தால்
காணும் அமைதி பேரமைதி !

Mahatma Gandhi Kavithai in Tamil:

என் நாட்டு மக்களே…நலமென்று

யூகிக்கிறேன், கனவொன்று கண்டேன் நேற்று

விழித்திட்டேன் கனவு நீளாதிருக்க…

மரங்களையும் மனிதத்தையும்

அழிப்பதைப் போலவும்…

ஆங்கிலேயனே ஆச்சரியப்படும்

அராஜகம் அரசியலாயும்..!

என்வழியில் அறப்போர் செய்தால்

அனைவரையும் அழிப்பதைப் போலும்..!

சுதந்திரமே பெறவில்லை என்று

சொல்லிச் சிலரும்,பெறாமலே

இருக்கலாமோ என்பதாய் சிலரும்

அப்பப்பா இன்னும் சொல்ல பதைக்கிறதே

நெஞ்சம்..கனவில் கூட

வேண்டாமென விழித்துள்ளேன் இன்னும்..!

மகாத்மா காந்தி கவிதை தமிழ்:

 மகாத்மா காந்தி கவிதைகள்

மது வேண்டாம் என்றார்

மாதுவை மதி என்றார்

பகட்டு வேண்டாம் என்றார்

பக்குவமாய் வாழ் என்றார்

வன்முறை வேண்டாம் என்றார்

அஹிம்சை வேண்டும் என்றார்

அவர் வேண்டாம் என்றதை

எல்லாம் வேண்டுமென சேர்த்துவிட்டு

வேண்டும் என்றதை வேண்டாம்

என ஒதுக்கி தள்ளிவிட்டு கொண்டாடுகிறோம்

காந்தி ஜெயந்தி அர்த்தமில்லாமல்..!

மகாத்மா காந்தியின் சில பொன்மொழிகள்..!

காந்தி கவிதை தமிழ்:

 mahatma gandhi tamil kavithai

காந்தியை விரும்புகிறார்கள் மாணவர்கள்- அவர்
பிறந்த நாளில் விடுமுறை கிடைப்பதால்.

காந்தியை விரும்புகிறார்கள் மக்கள்- அவர்
ரூபாய் நோட்டில் சிரிப்பதால்.

காந்தியை விரும்புகின்றன கட்சிகள்- அவர்
படத்தைக் காட்டி அரசியல் ஆதாயம் பெற முடிவதால்.

Gandhi Kavithaigal:

பாரினில் பல பாதையுண்டு

அகிம்சை பாதையால்

சிறப்புண்டு..!

உரிமை வேண்டி எங்குமே

உண்ணா விரதப் போராட்டம்

இது காந்திய வழியன்றோ?

ஜல்லிக்கட்டு போராட்டம்

அறவழி நடந்தது

இது காந்திய வழியன்றோ

காந்திய வழி நடந்ததால்

பெற்ற வெற்றி நிலைக்குதே

சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள் 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement