வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகாத்மா காந்தி பற்றிய பாடல் வரிகள்

Updated On: September 17, 2025 6:52 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மகாத்மா காந்தி பாடல்கள்

நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி அவர்கள். இவர் அக்டோம்பர் 2,1869 அன்று இந்தியாவில் உள்ள போர்பந்தரில் பிறந்தார். இவர் லண்டனில் சட்டம் பயின்றார். இந்திய விடுதலை போராட்டத்தை தலைமையேற்று நடத்தி இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததால் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். அகிம்சைவழி போராட்டங்கள் மூலம் நம் நாட்டை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்டு தந்த தியாகி மகாத்மா காந்தி அவர்களின் பெருமையை சொல்ல புத்தகத்தின் பக்கங்கள் பத்தாது. மகாத்மா காந்தி  பகவத் கீதை ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் போன்ற  எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட காந்தி சத்தியம் , அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். 

மகாத்மா காந்தி மற்றும் மார்ட்டின் கிங் ஜூனியர் போன்ற அகிம்சையை பயன்படுத்திய மாபெரும் மனிதர்களின் செயல்பாடுகள், அகிம்சையின் வரலாற்றை கண்டறியும் தேடலை தூண்டிவிட்டனர். பண்டைய கிழக்கிந்திய தத்துவம் அகிம்சை பற்றிய நல்ல பின்னணியை வழங்கியுள்ளது. இதில் பௌத்தம் முற்றிலும் வன்முறையற்ற தத்துவம் ஆகும்.  இன்றைய பதிவில் மகாத்மா காந்தியை பற்றிய பாடல் வரிகளை பற்றி பார்க்கலாம் வாங்க

மகாத்மா காந்தியின் பாடல் வரிகள்:

காந்தி தாத்தா பாரப்பா 

கருணை மனிதர் தானப்பா 

சட்டை யணியா ஆளப்பா

சட்டம் படித்த மேதையப்பா 

 

வெள்ளையரை வென்றவர் 

விடுதையை பெற்றவர் 

அகிம்சை வழி சொன்னவர் 

அகிலம் போற்ற வாழ்ந்தவர் 

 

உழவன் நிலை அறிந்தவர் 

உரிமை குரல் கொடுத்தவர் 

கிராமங்களைப் பார்த்தவர் 

கோட்டும் சூட்டும் மறந்தவர் 

 

ஏழைக்காகப் பிறந்தவர் 

ஏழையை போல வாழ்ந்தவர்

இராட்டை கற்றுத் தந்தவர் 

பாட்டாளியை மதித்தவர் 

 

கோட்டை ஆள தவிர்த்தவர் 

கொத்தடிமை ஒழித்தவர் 

நாட்டை வாழ வைத்தவர் 

இராம இராஜ்யம் ஏங்கியவர் 

 

இந்தியாவை காத்தவர் 

இறைவனாகி இருப்பபவர் 

காந்தி மகான் தானிவர் 

கைகூப்பி வாங்குவோம்.

மகாத்மா காந்தியின் கவிதைகள்

எளிமையான பாடல் வரிகள்:

எங்கள் காந்தி தாத்தா 

எல்லோருக்கும் நல்லவர் 

பொங்கும் சிரிப்பு தாத்தா 

பொய் சொல்லவே மாட்டார் 

 

தங்கம் போல நல்லவர் 

சத்தியம் கடவுள் என்பவர் 

எங்கள் காந்தி தாத்தா 

இந்தியாவின் தந்தையாம் 

 

எங்கள் நாட்டின் விடுதலை 

எமக்கு வாங்கித் தந்தவர் 

அன்பு வழியில் சென்றவர் 

அஹிம்சை போற்றி நின்றவர் 

 

இந்திய நாட்டின் தந்தையாய் 

என்றும் போற்றும் காந்தியாம் 

எங்கள் காந்தி தாத்தா

 எல்லோருக்கும் நல்லவர். 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now