மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்
மகாத்மா காந்தி அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்த தலைவர் ஆவார். இவர் அக்டோபர் 2, 1869 இல், குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது வாழ்க்கைப் பயணம், அகிம்சை, உண்மை மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றின் வலிமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. அவரது கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியது, வரலாற்றின் போக்கை வடிவமைத்து, உலகில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது. இவரை பற்றி 10 வரிகளில் காண்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்:
மகாத்மா காந்தி அவர்கள் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய் காந்தி தம்பதியர்களுக்கு மகனாக பிறந்தார்.
இவரது முழுப் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மேலும் அவர் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். கூச்ச சுபாவம் கொண்ட நல்ல மாணவன். அவர் வளர்ந்தவுடன், அவர் சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார்.
இவர் 1883-ம் ஆண்டு கஸ்தூரிபா மக்காங்கி கபாடியாவை திருமணம் செய்து கொண்டார். 1888 -ஆம் ஆண்டு சட்டம் படிப்பதற்குஉயர்கல்வி படிப்பை லண்டன் சென்று படித்தார்.
1915-ல் இந்தியாவுக்கு திரும்பி வந்த காந்தி சுதந்திரத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். இவர் சத்தியாகிரகம் என்பதை வெளிப்படுத்தினார். சத்தியாக்கிரகம் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான கருவிகளாக உண்மை மற்றும் அகிம்சையின் சக்தியை வலியுறுத்தியது.
குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான சுதந்திர தின வரவேற்பு உரை..!
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போது பல் முக்கிய தருணங்களில் காந்திரோயின் அகிம்சை மற்றும் 1920 முதல் 1922 வரை ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
1930-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து 240 மைல் தொலைவில் உள்ள தாண்டிக்கு 23 நாட்கள் பேரணியாகச் சென்று, மக்களின் ஆதரவுடன் அங்குள்ள கடல்நீரில் இருந்து உப்பைக் காய்ச்சி அங்கிருந்த அனைவருக்கும் உப்பை விநியோகித்தார். இதனால் தான் அங்கிருந்த மக்களும், காந்தியும் சிறையில் அடைக்கப்பட்டார். போருக்கு பிறகு தான் பிரிட்டிஷ் அரசு உப்பு மீதான வரியை திருமப பெற்றது.
1942ல், இரண்டாம் உலகப் போரின்போது, ஆங்கிலேயர் ஆட்சியை உடனடியாக நிறுத்தக் கோரி, காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் நாடு முழுவதும் வெகுஜன ஒத்துழையாமை மற்றும் வேலைநிறுத்தங்களைக் கண்டது. இந்த இயக்கம் ஆங்கிலேயர்களால் கொடூரமான அடக்குமுறையைச் சந்தித்த போதிலும், அது சுதந்திரக் கோரிக்கையை தீவிரப்படுத்தியது மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை உலகளாவிய கவனத்திற்கு கொண்டு வந்தது.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று ஆங்கிலேயே அரசை வெளியேற செய்தார்.
இவர் எதிர்ப்பாராத விதமாக 1948-ம் ஆண்டு ஜனவரி, 30 அன்று டெல்லியில் நாதுராம் கோட்சேவால் சூடு கொல்லப்பட்டார். இவர் மறைந்த தினத்தை தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் செய்த தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை |
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |