வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகாத்மா காந்தி பற்றிய முக்கிய நிகழ்வுகள்

Updated On: September 19, 2025 4:10 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மகாத்மா காந்தியின் நிகழ்வு

இன்றைய பதிவில் மகாத்மா காந்தி பற்றிய முக்கிய நிகழ்வுகளை பார்க்க போகிறோம். மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை என இந்திய மக்களால் போற்றப்பட்டார். அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இவரை பற்றி  போகலாம். அதனால் இந்த பதிவில் இவரின் மகாத்மா காந்தி பற்றிய முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

Mahatma Kandhi :

  • 1869 அக்டோபர் 2 அன்று குஜராத்தில் போர்பந்தரில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த்  காந்தி 
  • மோகன்தாஸ் காந்தியின் தந்தையார்,கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி தாயார் புத்லிபாய் .
  •  காந்தியின் தந்தை கரம்சந்த்  காந்தி போர்பந்தர் சமஸ்தானத்துக்கு திவானாக இருந்தார் 
  • போர்பந்தரில் ஆரம்ப கல்வியையும் ராஜ்கோட்டில் மேல்நிலை கல்வியையும் படித்தார் காந்தி.
  • காந்திக்கு 13 வயதானபோது அவருக்கு அதே ஊரை சேர்ந்த கஸ்த்தூரி பாயுடன்
    திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
  • தன் மகனை திவானாக்க விரும்பிய கரம்சந்த்  காந்தி 1885 ல் திடீர் மரணம் அடைந்தார் .
  • காந்திக்கு ஹரிலால் மற்றும் ராம்தாஸ் தேவதாஸ் மணிலால் என நான்கு ஆண் குழந்தைகள் உள்ளன.
  • 1887ல் மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றி பெற்றார்  காந்தி. கல்லூரி   படித்தபோது காந்தியின் கனவு பாரிஷ்டர் ஆக வேண்டும் என்பதாகவே இருந்தது.
  • 18 வயது நிரம்பிய காந்தி சட்டம் படித்து பாரிஷ்டராகும் கனவுடன் லண்டனுக்கு பயணமானார் .
  • மது , மாமிசம் ,மாது ஆகிய மூன்றையும்தொடமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டே லண்டன் சென்றார் காந்தி 
  • லண்டனில் இருந்த போது பகவத்கீதையை முழுமையாக படித்து முடித்தார் காந்தி.1891ல் சட்ட படிப்பை முடித்த காந்தி பாரிஷ்டர் பட்டம் பெற்று. இந்தியா திரும்பினார்.
  • 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அப்துல்லா கம்பெனியில் வழக்கறிஞராக  பணியாற்ற சென்றார். ஓராண்டு ஒப்பந்தத்தில் சென்ற காந்தி சுமார்  21ஆண்டுகள்’தென்னாப்பிரிக்காவில் வாசித்தார்.
  • டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகையுடன் வாதாட காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • ரயிலில் சென்ற காந்தியை சக வெள்ளையர்கள் நிறத்தை காட்டி வெளியேற்றினர். நிறவெறியால் ரயிலில் இருந்து வீச பட்ட நொடியில் இருந்து காந்திக்கு புரட்சி நெருப்பு ஏற்பட்டது.
  • தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை தீவிரமாக எதிர்த்தார் காந்தி.
  • பிரிட்டிஷுக்கு எதிராக சத்தியாகிரகம் என்ற புதிய போராட்ட வடிவத்தை கையில் எடுத்தார் காந்தியடிகள்.
  • காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழியை வழங்கி கௌரவப்படுத்தியவர் கவிஞர் ரவிந்த்ரநாத் தாகூர்.
  • 1906 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஜொகனபார்க்கில் சாத்தியகிரக போராட்டத்தை நடத்தினார்  காந்தி.
  • பிரிட்டிஷுக்கு எதிரான  காந்தியின் போராட்ட உத்திகள் இந்திய காங்கிரஸ் தலைவர்களை கவர்ந்தனர்.
  • மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு துணையாக நின்றவர் தில்லையாடி வள்ளியம்மை.
  • சம்பரன் பருத்தி விவசாயிகள் உரிமைகளுக்காக காந்தி தனது முதல் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினார்.
  • இந்தியர்களின் உரிமையை பறிக்கும் ரெளலட் சட்டம் 1919 அமலுக்கு வந்து பொது  காந்தி தமிழ்நாட்டில் தான் இருந்தார்.
  • கருப்பு சட்டமான ரெளலட் சட்டதுக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழகத்தில் ‘இருந்தே அழைப்பு விடுத்தார் காந்தி.
  • காந்தியின் அழைப்பை ஏற்று இந்தியா முழுக்க போராட்டம் வெடித்ததை கண்டு பிரிட்டிஷார் ஆத்திரப்பட்டனர்.
  • அமிர்தசரஷில் ஜாலியன் வாலாபாக்கில் கூடிய ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
  •  ஜாலியன் வாலாபாக்படுகொலை நடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார் காந்தி.
  •  அந்நிய துணிகளை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்ன காந்தி அதற்கு மாற்றாக கதரை முன்னிறுத்தினார்.
  • காந்தியின் கதர் கொள்கையை ஏற்றுக்கொண்ட பெரியார், கதர் விற்பனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் 
  • பிரிட்டிஷுக்கு எதிராக நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்புவிடுத்தார் காந்தி. சௌரி சௌராவில் நடந்த போராட்டத்தில் போலீசாரின் தாக்குதலுக்கு பதிலடியாக மக்களும் வன்முறையில் இறங்கினர். அகிம்சை போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று சொல்லி போராட்டத்தை திரும்ப பெற்றார்.
  • 1922 தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காந்தி தனிமைச்சிறையில்’அடைக்கப்பட்டார்.
  • சத்திய சோதனை என்ற சுயசரிதத்தை 1923 ஆம் ஆண்டு எழுத தொடங்கினார் காந்தி. உலக அளவில் வெளியான சுயசரிதைகளுல் காந்தியின் சத்திய சோதனைக்கு முதன்மை இடம் உண்டு.
  • இந்தியாவுக்கு ஓராண்டுக்குள் சுதந்திரம் தரவிட்டால் சத்தியாகிரகம் தீவிரம்அடையும் என 1928 ல் அறிவித்தார் காந்தி.
  • அந்நியர்களின் துணிகளை எரித்து கதரை முன்னிலை படுத்தினார் காந்தி.
  • ஓராண்டு கெடு முடிந்ததும் 1929 ஆம் ஆண்டு டிசம்பரில் சாத்தியகிரகத்தை வலியுறித்தினார்,
  • இந்தியாவில் தயாரிக்கும் உப்பை எடுக்க இந்தியர்களுக்கே வரி விதித்ததை எதிர்த்தார் காந்தி.
  • மார்ச் 12, 1930 ஆம்  அகமதாபாத் தொடக்கி தண்டி யாத்திரை 240 மைல்  நடைபயணம் மேற்கொண்டார் காந்தியடிகள்.
  • பிரிட்டிஷுக்கு எதிராக 1942 ல் ஆகஸ்ட் புரட்சி என்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த தீர்மானித்தார் காந்தி.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவரமடையவே அதற்கு காரணமாக இருந்த காந்தியை சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு.சில போராட்டங்களுக்கு பிறகு மகாத்மா காந்தியை கோபால கோட்சே சுட்டு கொன்றார்.
  • காந்தி தனது அரசியல் வாரிசாக  நேருவைதான் அறிவித்தார் .காந்தியின் சரியான அரசியல் வாரிசாக விளங்கியவர் நேரு.
  • பாகிஸ்தான் சுதந்திர அறிவிக்கபட்ட மறுநாள் ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு  இந்திய சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவின்  சுதந்திரத்திற்காக 32 ஆண்டுகள்  போராடிய காந்தி இந்திய சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

மகாத்மா காந்தி பேச்சு போட்டி தமிழ்

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now