Malam Kanavu Palangal in Tamil
கனவுகள் இறைசக்திகள் மூலம் நமக்கு உணர்த்தும் தகவல் ஆகும். இந்த பதிவில் மலத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பது குறித்த தகவலை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். பொதுவாக மனிதனின் மல கழிவுகளை கனவில் கண்டால் வரவிருக்கும் பணம் வரவு குறித்தும், நல்ல வேலைவாய்ப்பு அதன் மூலம் வருமானம் பெருக்கம் கிடைக்க இருப்பதையும், நல்ல செல்வ வளம் கிடைக்க இருப்பதையும் குறிக்கும். சரி வாங்க மலம் சார்ந்த கனவு பலன்களை இனி ஒவ்வொன்றாக அறியலாம்.
மலத்தை கனவில் கண்டால் என்ன பலன் – Malam Kanavu Palangal in Tamil
கனவு காண்பவர்கள் கனவில் கழிப்பறையில் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு மனமுழுக்க தொழில் தொடங்க வேண்டும் ஏற்ற ஆர்வம் வரவிற்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
யாரோ ஒருவர் செய்த பழைய தவறை மன்னிக்கவே மாட்டேன் பிடிவாதமாக நீங்கள் இருப்பதையும் குறிக்கிறது.
மலத்தை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் பணம் வரவை குறிக்கிறது.
கனவில் மலத்தை வெறுப்புடன் பார்ப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவர் தனக்கு வராத வருமானத்தை பற்றி மன கவலையுடன் இருக்கவிருப்பதை குறிக்கிறது. மேலும் வரக்கூடிய வாடிக்கையாளரை இகழ்ச்சியாக தவறாக பேசிவிடவிருப்பதையும் எனவே கவனமாக பிறர் மனம் நோகாதபடி பேசவும் அறிவுறுத்துகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுற்றுலா செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்
யாரோ ஒருவரது மலத்தையோ அல்லது விலங்குகளின் மலத்தையோ சுத்தம் செய்வது போல் கனவு வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பிறர் தவறாக முடித்த வேலையை திரும்பவும் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து அதை சரிபடுத்திவிட இருப்பதையும், வருமானம் உயர்வு வரவிருப்பதியும் குறிக்கிறது.
மலத்தின் மீது மிதித்து நடந்து செல்வது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இது ஒரு நல்ல கனவாக, தொழிலில் நல்ல அதிர்ஷ்டம், எதிர்பாராத விதமாக வருமான உயர்வுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கவிருப்பதையும் அல்லது அதிக சம்பளம் கிடைக்கவிருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
காலனியில் ஒட்டிய மலத்தை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால், கனவு காண்பவருக்கு வரவிருக்கும் குறைந்த வருமானத்தை பற்றி குறிக்கிறது. ஆக தன் தகுதிக்கு கீழ் வேலை செய்யக்கூடாது என ஊதுகுவது தான் காரணமாக இருக்கும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
மலத்தை தொடுவது போலவோ அல்லது கையில் வைத்திருப்பது போலவோ கனவு கண்டால் கனவு காண்பவருக்கு எந்த வேலையை செய்தாலும் முழு திருப்தி இல்லாமல் செய்யவிருப்பதையும், தேவையில்லாத ஒரு வேலையை கனவு காண்பவரின் தலைமையில் இருப்பவர் கொடுப்பதால் அதை எரிச்சலுடன் செய்ய இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
யார் மீதோ அல்லது ஏதோ ஒன்றின் மீது மலத்தை வீசுவது போல் கனவு கண்டால். யாரோ ஒருவர் கனவு காண்பவரிடம் மிகுந்த உரிமையுடன் தன் காரியங்களை சாதித்துக்கொள்ள விருப்பத்தை இந்த கனவு உணர்த்துகிறது.
விலங்குகளின் மலம்:
விலங்குகளின் மலத்தை கனவில் கண்டால் உங்களின் பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்பதனை குறிக்கிறது.
மலத்தை மிதிப்பது போல கனவு கண்டால் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. உங்களின் வருமானம் அதிகரிக்கும் என்பதனை குறிக்கிறது.
குழந்தையின் மலம் கனவில் கண்டால்:
குழந்தையின் மலம் கனவில் கண்டால் பணியிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உங்களை தான் எடுத்துக்காட்டாக கூறுவார்கள்.வாழ்க்கையில் புதிய தொடக்கம் ஆரம்பிக்க போகிறது என்பதனை குறிக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..?
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














