மாம்பழம் சாப்பிடுவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Advertisement

Mango Details in Tamil

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படக்கூடிய ஒரு பழமாகும். மாம்பழம் இந்திய மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளில் தேசிய பழமாக கருதப்படுகிறது. மா, பலா, வாழை மூன்றும் முக்கனிகள் என்று கூறப்படுகிறது. மாம்பழம் பழமாகவும் ஜூஸ் ஆகவும் உண்ணப்படுகிறது. இந்திய வேதங்களில் மாம்பழத்தை கடவுளின் உணவாக கருதப்படுகின்றன. இவ்வளவு சிறப்புகள் பெட்ரா மாம்பழத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி.? மாம்பழத்தை பற்றிய பல விவரங்களை பின்வருமாறு தொகுத்துள்ளோம். எனவே, இப்பதிவை முழுவதுமாக படித்து மாம்பழம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

மாம்பழம் பற்றிய தகவல்:

 mango details in tamil

 

மாம்பழம் எப்போது அறிமுகமானது.?

இந்தியாவில் மாம்பழங்களை, சுமார் கி.மு 4000 ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 1800 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் ஐரோப்பிய நாட்டிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அறிமுகம் செய்தனர்.

மாமரத்தின் தோற்றம்:

மாமரம் 35 மீ முதல் 40 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் பச்சை நிறத்துடன் பசுமையாக இருக்கக்கூடியது. இதன் இலைகள், 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ. மீ அகலமும் உடையது. இவற்றின் பூக்கள், கிளையின் நுனிப்பகுதியில் கொத்து கொத்தாக வளரக்கூடியவை.

பூக்கள் பூக்க தொடங்கிய நாளிலிருந்து மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

மாம்பழங்கள் 10 – 25 செ.மீ நீளமும், 7 – 12 செ.மீ விட்டமும் மற்றும் 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் மஞ்சள், சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறங்களிலும் காணப்படுகிறது.

உலர் திராட்சை பற்றி தெரியுமா உங்களுக்கு.?

மாம்பழத்தின் பயன்பாடுகள்:

மாம்பழத்தின் தோலையும் அதன் விதையையும் நீக்கிவிட்டு உண்ணக்கூடிய ஒரு சுவை மிகுந்த பழமாகும். இது மாம்பழ பழச்சாறாகவும், மாம்பழ மிட்டாயாகவும், மாம்பழம் ஐஸ்கிரீம் ஆகவும், மாம்பழம் லெஸ்ஸியாகவும் பயன்படுகிறது.

அதிலும், குறிப்பாக மாங்காய் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்றாகும், மாங்காயில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடும் பழக்கம் அனைவரிடமும் உள்ளது. மேலும், மாங்காயினை கொண்டு வத்தல், குழம்பு, ஊறுகாய், பச்சடி போன்ற பலவிதமான உணவுகளை செய்யலாம்.

மாம்பலத்தில் உள்ள சத்துக்கள்:

மாம்பழத்தில் சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் B6, வைட்டமின் சி, வைட்டமின் K, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

மாம்பழத்தின் இரகங்கள்:

மாம்பழத்தில் பல வகைகள் உள்ளது. மாம்பழத்தின் வடிவம், நிறம், அளவு மற்றும் சுவை போன்றவற்றை வைத்து மாம்பழத்தை வகைப்படுத்தி உள்ளனர். எனவே, மாம்பழத்தின் வகைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • செந்தூரா மாம்பழம்
  • கறுத்த கொழும்பான்
  • வெள்ளைக் கொழும்பான்
  • பங்கனப்பள்ளி மாம்பழம்
  • மல்கோவா மாம்பழம்
  • ருமானி மாம்பழம்
  • திருகுணி
  • விலாட்டு
  • அம்பலவி
  • செம்பாட்டான்
  • சேலம்
  • பாண்டி
  • பாதிரி
  • களைகட்டி
  • பச்சதின்னி
  • கொடி மா
  • மத்தள காய்ச்சி
  • நடுசாலை
  • சிந்து
  • தேமா (இனிப்பு மிக்கது) [2]
  • புளிமா
  • கெத்தமார்
  • சீமெண்ணெய் புட்டிக்கா
  • காலபாடி ஆகிய பல வகைகள் உள்ளன.

மாம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா.!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement