Mangosteen Fruit in Tamil
நாம் அனைவருமே இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு ஆகியவற்றால் ஏற்படும் உடல்நல குறைபாடுகளை நாம் தாங்கி இந்த உலகில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமக்கு பெரிதும் உதவுவது நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுதான். அப்படி நமக்கு மிகவும் உதவும் உணவுகளை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் மங்குசுத்தான் பழத்தின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Mangosteen Fruit Details in Tamil:
மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன் என்பது வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது க்ளூசியாசியே (Clusiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இம்மரம் 7 முதல் 25 m (20–80 ft) உயரம் உடையது.
இதன் பழமானது வெளிப்புறம் நன்கு தடிமனான மற்றும் உட்புறத்தில் இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள வெள்ளை நிறமுடைய சதைப்பகுதியை கொண்ட பழம் ஆகும்.வெளிப்புறமானது
இந்த பழத்தின் வெளிப்புறமானது கருங்கபில நிற முடியாது. இது பொதுவாக உண்ணப்படுவது இல்லை. பழத்தின் உட்புறம் இருவித்திலை கொண்ட விதை காணப்படும்.
உங்களுக்கு Peach பழத்தை அதிகம் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்த எப்படி
பிறப்பிடம்:
இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. தற்பொழுது இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
கடார முருகல் என்று தமிழ் மொழியிலும், மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன்- மலேசியத் தமிழிலும், கார்சீனியா மாங்கோஸ்தானா (Garcinia Mangostana) என்று தாவரவியல் பெயரிலும், மங்குஸ்தான் (Mangosteen) என்று ஆங்கில மொழியிலும் அழைக்கப்படுகிறது.
கிவி பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் மங்குஸ்தான் பழத்தில்,
- கார்போவைதரேட்டு – 18 g
- நார்ப்பொருள் – 1.8 g
- கொழுப்பு – 0.6 g
- புரதம் – 0.4 g
- கல்சியம் – 10 mg
- இரும்பு – 0.2 mg
- பாசுபரசு – 20 mg
- நீர் – 81 g
பயன்கள்:
மங்குஸ்தான் பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலமாக அதில் உள்ள வைட்டமின் C சத்து ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகிறது.
இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் ஆனது உடலில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
இதில் நார்சத்து இருப்பதால் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை சரி ஆகிவிடும்.
மங்குஸ்தான் பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய இதயம் ஆனது ஆரோக்கியமாக இருக்கும்.
உளுந்தினை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |