மஞ்சள் நீராட்டு விழா சீர்வரிசை பொருட்கள் | Manjal Neerattu Vizha Seer Varisai

manjal neerattu vizha seer varisai

பூப்புனித நீராட்டு விழா சீர்வரிசை | Puberty Ceremony Sequence in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெண்களின் வாழ்வில் மிக முக்கிய தருணமான மஞ்சள் நீராட்டு விழாவில் என்ன மாதிரியான சீர்வரிசை பொருட்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. பூப்புணிதல் நீராட்டு விழா பெண்பால் முதிர்ச்சி அடைந்து முதல் மாதப் போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். அந்த சடங்கில் பெண்ணின் தாய்மாமன் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாம் இந்த பதவில் மஞ்சள் நீராட்டு விழா என்றால் என்ன மற்றும் அதில் என்ன மாதிரியான சீர் வரிசை பொருட்கள் இருக்கும் என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மஞ்சள் நீராட்டு விழா:

மஞ்சள் நீராட்டு விழா சீர்வரிசை பொருட்கள்

 • பூப்படைந்த பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா என பொருள். அதாவது பருவ வயதை கடந்த ஒரு பெண் பருவ மாற்றம் பெற்று “பக்குவப்படும்போது” நடத்தப் பெறும் ஒரு சமயச் சடங்காகும்.
 • பூப்பெய்திய பெண்ணை முதலில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி குளிக்க வைப்பார்கள். இதனை முதல் தண்ணீர் ஊற்றுதல் என்று அழைக்கின்றனர்.
 • பின் அந்த பெண்ணை பச்சை ஓலையில் கட்டிய குடிசையில் 16 நாட்கள் தனியாக உட்கார வைத்திருப்பார்கள் (முன்னோர் காலத்தில் ஓலையில் உட்கார வைப்பது இருந்தது இப்போது அந்த வழக்கம் பெரும்பாலான இடங்களில் இருப்பதில்லை)
 • 15 நாட்களில் அந்த பெண்ணிற்கு நாட்டு கோழி முட்டை, நல்லெண்ணெய், கலி போன்ற சத்துள்ள உணவை சாப்பிடுவதற்கு கொடுப்பார்கள்.
 • 16-வது நாள் சடங்கு செய்வார்கள் (ஒரு சிலர் 16-வது நாளில் செய்யாமல் நல்ல நாட்கள் பார்த்து சடங்கை வீட்டில் அல்லது மண்டபத்தில் செய்கிறார்கள்)
திருமணத்திற்கு எவ்வளவு சீர்வரிசை பொருட்கள் இருக்க வேண்டும் தெரியுமா?

மஞ்சள் நீராட்டு விழா சீர்வரிசை பொருட்கள்:

 • சடங்கில் தாய்மாமன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, பழங்கள், சீப்பு, கண்ணாடி, வளையல், அலங்கார பொருட்கள், பூ, மாலை, பாத்திரம், மேலதாளம், வானவேடிக்கை போன்றவற்றை சீர் வரிசை பொருட்களாக கொண்டு வருவார்கள்.
 • சீர் வரிசை பொருட்கள் பெரும்பாலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 16, 21 தட்டு வைக்கிறார்கள். ஒரு சிலர் 50 மேற்பட்ட தட்டுக்கள் கூட வைக்கிறார்கள்.
 • சீர் வரிசை பொருட்கள் கொடுத்தவுடன் பெண்ணிற்கு தாய்மாமன் வாங்கிய துணியை உடுத்தி அமர வைப்பார்கள்.
 • பின் உற்றார் உறவினர்கள் பெண்ணின் முகத்தில், கைகளில் மஞ்சள், குங்குமம் பொட்டு இடுவார்கள்.
 • சடங்கிற்கு நெல், வேப்பிலை, அருகம்புல், சர்க்கரை, அம்மிக்கல், Rippon போன்றவை இருக்கும் இதை வைத்து தான் சடங்கு சுத்தி முடிப்பார்கள்.

பூப்புனித நீராட்டு விழா வேறு பெயர்கள்:

 • திரட்டி, சடங்கு சுற்றுதல், மஞ்சள் நீராட்டு விழா போன்ற பெயர்கள் உண்டு.
 • இந்த விழா கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் தங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறாள் என்பதை மறைமுகமாக தெரியபடுத்துவதற்காக தான்.
நிச்சயதார்த்தத்திற்கு எத்தனை சீர்வரிசை பொருட்கள் இருக்கவேண்டும் தெரியுமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.Com