மரபு சொற்கள் | Marabu Sorkal

Advertisement

தமிழ் மரபு சொற்கள் | Tamil Marabu Sorkal

மரபு சொற்கள் என்றால் என்ன: அதென்ன மரபு சொற்கள்? மரபு சொற்கள் என்பது மரபு ரீதியாக வழங்கி வரும் சொற்களைக் குறிக்கும். உதாரணத்திற்கு, பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும், முன்னோர் கூறிய மரபினைத் பின்பற்றி வருவது மரபாகும். “நாய் கத்தியது” எனக் கூறுவது வழக்கம். ஆனால் அப்படி கூறுவது தவறு. மரபு படி “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும். இவ்வாறு சில மரபு சொற்களை கீழேபடித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

தூய தமிழ் வார்த்தைகள்

Marabu Sorkal in Tamil:

உயிரினம்  உயிரினம் ஒலிக்கக்கூடிய (மரபு)
ஆடு கத்தும்
எருது கனைக்கும்
குரங்கு அலப்பும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
பூனை சீறும்
யானை பிளிறும்
எலி கீச்சிடும்
ஆந்தை அலறும்
காகம் கரையும்
கிளி பேசும்
குயில் கூவும்
கூகை குழறும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
புறா குனுகும்
மயில் அகவும்
வண்டு முரலும்
பசு கதறும்

 

பொருள் பொருளுக்கான வினை (மரபு)
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
உமி கருக்கினான்
பூ பறித்தாள்
மரம் வெட்டினான்
மாத்திரை விழுங்கினான்
சோறு உண்டான்
தண்ணீர் குடித்தான்
பால் பருகினான்
கூடை முடைந்தார்
சுவர் எழுப்பினான்
முறுக்குத் தின்றான்

 

உயினங்களின் இருப்பிடம்  அதன் மரபு சொல் 
கறையான் புற்று
ஆட்டுப் பட்டி
மாட்டுத் தொழுவம்
குதிரைக் கொட்டில்
கோழிப் பண்ணை
குருவிக் கூடு
சிலந்தி வலை
எலி வளை
நண்டு வளை

 

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை
தாவரத்தின் உறுப்புகள்  தாவரத்தின் மரபுகள் 
வேப்பந் தழை
ஆவரங் குழை
நெல் தாள்
வாழைத் தண்டு
கீரைத் தண்டு
தாழை மடல்
முருங்கைக் கீரை
தென்னங் கீற்று
கம்பந் தட்டு (திட்டை)
சோளத் தட்டு (திட்டை)

 

விலங்குகள் இளமை பெயர்களும்  அதன் மரபும் 
கோழிக் குஞ்சு
கிளிக் குஞ்சு
அணிற் பிள்ளை
கீரிப் பிள்ளை
பசுவின் கன்று
நாய்க் குட்டி
புலிப் பறழ்
சிங்கக் குருளை
யானைக் கன்று
குதிரை கன்று
எருமை கன்று

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement