மரப்பாச்சி பொம்மை
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் விளையாட மொபைல் கேம்களும் வீடியோ கேம்களும் போதுமானதாக இருக்கிறது. அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு பொம்மைகளை கொண்டு விளையாடும் போது உருவாகும் புரிதலும் சமூகத்தின் பார்வையும் வேறுபடுகிறது. ஆனால் நமது முன்னோர் குழந்தைகளுக்கு விளையாட மரப்பாச்சி பொம்மைகளை வழங்கினார். அது குழந்தைகளில் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகித்தது. மரப்பாச்சி பொம்மைகள் மகிழ்ச்சியின் அடையாளமாக காணப்பட்டது. அத்தகைய சிறப்புமிக்க மரப்பாச்சி பொம்மைகள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Marapachi Bommai in Tamil:
மரப்பாச்சி பொம்மைகள் செம்மரத்தில் மட்டுமே உருவாக்க பட்டது. பின்னர் மரப்பாச்சி பொம்மைகள் ஊசியிலை, தேக்கு, கருங்காலி, செம்மரம், செஞ்சந்தனம் மரங்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொம்மைகள் ஆகும்.
மரப்பாச்சி பொம்மைகள் முதலில் ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அதற்கு காரணம் திருப்பதியை சுற்றி அதிக அளவில் மரப்பாச்சி பொம்மைகள் தயாரிக்க செம்மரங்கள் காணப்பட்டது.
மரப்பாச்சி பொம்மைகள் வடிவம்:
மரப்பாச்சி பொம்மைகள் முதலில் பாலாஜி பத்மாவதி, விஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி போன்ற கடவுள்களையும் பின்னர் ஆண், பெண் மற்றும் மணமக்கள் என பொம்மைகள் உருவாக்க பட்டது. மரப்பாச்சி பொம்மை குறிப்பாக ஜோடிகளாக மட்டுமே உருவாக்க படும்.
திருப்பதியில் லட்டுக்கு அடுத்தபடியாக மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன.
மரப்பாச்சி பொம்மைகளின் இணை பொம்மைகள் ஒரே மாதிரியான அளவு, வடிவம், உயரம் மற்றும் மர வகைகளில் ஒத்து இருக்கும்.
மருத்துவ குணம்:
மரப்பாச்சி பொம்மைகள் தயாரிக்கப்படும் மரங்கள் மருத்துவ குணம் உடையது. குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை வராமல் தடுக்க இவை பயன்படும். அதுமட்டும் அல்லாமல் பிளாஸ்டிக் போன்ற பொம்மைகளில் விளையாடும் போது அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
மரப்பாச்சி பொம்மைகள் செம்மரத்தில் தயாரிப்பதற்கு அதன் மருத்துவ குணமே முதன்மையாக இருந்தது.
மரப்பாச்சி பொம்மைகள் தசரா அல்லது நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவின் கோலு பண்டிகையின் போது முக்கிய பங்குவகிக்கிறது.
மரப்பாச்சி பொம்மை நம்பிக்கை:
மரப்பாச்சி பொம்மை செல்வம், செழிப்பு மற்றும் குடும்ப மகிழ்ச்சியின் அடையாளமாக நம்பப்படுகிறது. மரப்பாச்சி பொம்மைகள் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படுகின்றது. மரப்பாச்சி பொம்மைகள் மக்களை பாதுகாப்பதாகவும் ஆசீர்வாதிப்பதாகவும் நம்பப்படுகிறது.
மரப்பாச்சி பொம்மை தென்னிந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாகும். பொம்மைகள் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட கலை மற்றும் கைவினைப் படைப்புகள்.
மரப்பாச்சி பொம்மை திருமணங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்கு பிரபலமான பரிசு. தென்னிந்தியாவின் பிரபலமான நினைவுப் பரிசாக மரப்பாச்சி பொம்மைகள் காணப்படுகிறது.
மரப்பாச்சி பொம்மைகளை ஏன் குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கிறார்கள்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |