மார்கழி மாதம் தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள் | Margali Month Dhanam in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மார்கழி மாதத்தில் என்னென்ன தானங்கள் செய்ய வேண்டும்.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மார்கழி மாதம் என்பது மிகவும் சிறப்பான மாதம். இறைவனை வழிப்படுவதற்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்ட மாதம் தான் மார்கழி மாதம். மாதத்தில் நான் மார்கழியாக இருக்கிறன் என்று மஹாவிஷ்ணு கூறியிருக்கிறார். மார்கழி மாதத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திக்கிறது.
மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். பெண்கள் அனைவரும் அதிகாலையிலே அரசி மாவில் வாசலியில் கோலமிட வேண்டும். இந்த அரிசி மாவினை எலும்புகள் உட்கொள்ளும். இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய நல்ல விஷயம். மார்கழி மாதத்தில் நாம் சிலவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். அவற்றில் ஓன்று தான் தானம். மார்கழி மாதம் முடிவதற்குள் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ள தானங்களை உங்களால் முடிந்த அளவு செய்து புண்ணியம் பெறுங்கள்.
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்.!
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய தானம்:
- மார்கழி மாதத்தில் அன்னதானம் செய்ய மறக்காதீர்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்க்கு அன்னதானம் செய்யுங்கள்.
- ஏழ்மையான குடும்பத்திற்கு அரிசி வாங்கி கொடுக்கலாம். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்க்கு தேவையான அரிசிகளை வாங்கி தரலாம். மேலும், உங்களால் முடிந்தால் சமையலுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி தரலாம்.
- தங்குவதற்கு வீடு இல்லாமல் ரோட்டிலும், மற்ற இடங்களிலும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி சாலையோரம் படுத்துறங்கும் நபர்களுக்கு படுக்க பாய், பெட்ஷீட், உடுத்திக்கொள்ள துணி போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம். மார்கழி மாதம் குளிர்காலம் என்பதால் ரோட்டோரம் இருக்கும் நபர்களுக்கு இதுபோன்ற உதவிகளை செய்யலாம். கோடி புண்ணியம் கிடைக்கும்.
- உடுத்திக்கொள்ள நல்ல உடல் இல்லாமல் இருப்பவர்களுக்கு துணி தானம் செய்யலாம். முக்கியமாக, இந்த மாதத்தில் இரத்தம் தானம் செய்யலாம்.
- கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவ பொருட்களை வாங்கி தரலாம். அல்லது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யலாம்.
- குளிர்காலத்தில் பறவைகளின் வருகை அதிகமாக இருக்கும். அதிலும் காலை நேரத்தில் அதிகமான பறவைகள் வரும். அவைகளுக்கு உணவு அளிக்கும் விதமான ஒரு கிண்ணத்தில் சாதம் அல்லது தானியங்களை வீட்டின் வெளியில் அல்லது மொட்டை மாடியில் வைக்கலாம். பறவை அந்த வழியே பறந்து செல்லும்போது வந்து சாப்பிட்டுவிட்டு போகும்.
- அதேபோல், தேர்வில் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்களுக்கு உங்களால் முடிந்த உணவு பொருட்களை வாங்கி போடலாம். இதுபோன்று வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு அளிக்கலாம்.
- இதுபோன்ற விஷயங்களை மார்கழி மாதத்தில் செய்தால் அத்தனை சிறப்பு. எனவே, மேலே கூறியுள்ளதில் மார்கழி மாதத்தில் உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு தானத்தை ஆவது செய்து விடுங்கள்.
மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது தெரியுமா.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |