மாட்டு பொங்கல் பாடல் வரிகள்

Advertisement

மாட்டு பொங்கல் பாடல் வரிகள் 

தை மாதம் என்றாலே பொங்கல் தான். போகி பொங்கல், பெரும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்றாக உள்ளது. இதில் ஒவ்வொரு பொங்கலும் ஒவ்வொரு சிறப்புக்குரியதாக இருக்கிறது. அதில் மூன்றாவது நாளாக வர கூடிய மாட்டு பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான் நினைவிற்கு வரும். இந்த நாளில் மாட்டை குளிப்பாட்டி, பொட்டு வைத்து , மாலை அணிவிப்பார்கள். மாலை நேரத்தில் மாடுகளுக்கு சாமி கும்பிடுவார்கள். அன்றைய நாள் மாட்டு பொங்கல் அன்று பாட கூடிய பாடல் வரிகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Mattu Pongal Songs in Tamil Lyrics:

மாட்டு பொங்கல் பாடல் வரிகள் 

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
மொரட்டு காளை
துள்ளித் துள்ளிக்கிட்டு
விரட்டும் ஆள
முட்ட வந்து முட்ட வந்து
முறுக்கும் வால
தென்னாட்டு வீரம்தான்
ஜல்லிக்கட்டே!
ஜல்லி ஜல்லி ஜல்லி
ஜல்லிக்கட்டு
மாலையோடு காளையோடு
ஆடும் ஜல்லிக்கட்டு
தமிழா நீ மல்லுக்கட்டு..
தங்கச்சங்கிலி அள்ளிட்டு
தோள்வீரம் காட்டு
ஒரு மாடு மோதியே
மனுஷன் சாவது
உண்டு உண்டு – ஒரு
மனுஷன் மோதியே
மாடு சாவது
உண்டா? உண்டா? – இதில்
சட்டம் இருந்தா
சாட்சி இருந்தா
கொண்டா கொண்டா – இதை
மாத்திச் சொல்ல – ஒரு
தீர்ப்பும் உண்டா?
அது காளை இல்ல
அது இன்னொரு புள்ள
வந்து தொட்டு பாரு
உசிர் உன்னது இல்ல
வாடா
கொம்புள்ள காளை- அதை
அணஞ்சா நீ வீரன் புள்ள..
குறி தப்பி போனா – உன்
குடலே மாலை..
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழா நீ மல்லுக்கட்டு
தங்கச்சங்கிலி அள்ளிட்டு
தோள்வீரம் காட்டு

பொங்கலுக்கு பாடக்கூடிய பொங்கல் பாடல்கள்.! 

தட்டு தட்டு தொடை தட்டு – நீ
வெற்றிகிட்டும் வரை முட்டு..
தொட்டு தொட்டு திமில் தொட்டு – நீ
பட்டு பட்டு துண்டு கட்டு..
உன் மாமன் பொண்ண நினைச்சு
நீ மாட்ட கட்டி புடிடா..
நீ ஜெயிச்சு காமிச்சா
கழுத்த நீட்டுவா..
வாடி வாசலில்
மாலை சூட்டுவா..
தோத்து போயிட்டா
கம்பி நீட்டுவா
போடா..போடா..
மாடு சில நேரம் தோக்கலாம்..
மனுஷன் சில நேரம் தோக்கலாம்..
வீரம் அது தோற்பதில்லையே
போராடிப் பாரு மச்சான்..
மாமதுரை வீரா
உன் மார்பு திறந்து வாடா
வீரா வா

ஜல்லிக்கட்டு
தமிழர் உச்சம்
வீரத்தில்
இதுதான் மிச்சம்
துளியும் இல்ல
நெஞ்சில் அச்சம்
உயிரெல்லாம் துச்சம்

கறுத்த காளை காயம் செய்யும்..
மயில காளை மாயம் செய்யும்..
காளையே வா..வா..வா..
வீரமே போ..போ..போ..
சீறுது ஏறு
முன்னேறு
செம்புலியாய் நீ
வாடா இது நூற்றாண்டின் யுத்தம்..
உன் தாய்மண்ணில் சிந்தும் அது முன்னோரின் ரத்தம்.. ரத்தம்..
வாடா.. இது நூற்றாண்டின் யுத்தம்..
அட மோதி பார்..உன்னை இனி வெல்லாது சட்டம்.. சட்டம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement