May Day Speech in Tamil | Labour Day Speech in Tamil
ஒவ்வொரு வருடமும் மே 1 உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது உலகம் முழுவதும் விடுமுறை நாளாக இருக்கும். இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல வகையான போட்டிகளை நடத்துவார்கள். அதில் ஒன்று தான் பேச்சு போட்டி. இந்த பேச்சு போட்டிற்காக தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் மே 1-ற்கான பேச்சு போட்டி பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Labour Day Speech in Tamil | உழைப்பாளர் தின பேச்சு போட்டி
இந்த அவையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
வருடந்தோறும் மே 1 தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது உழைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 1880-ம் ஆண்டுகள் எல்லாம் 16 மணிநேரம் அல்லது 18 மணி நேரம் வேலை நேரமாக இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல தூக்கம் போன்றவை எல்லாம் பணக்காரர்களுக்கு வரமாக இருக்கிறது. இதனை எதிர்த்து போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மே 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடந்த சிக்காகோ என்ற இடத்தில் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் அவர்களை தாக்குதல் செய்தனர். இந்த தாக்குதலில் தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டதோடு, 7 தொழிலாளர்களின் தலைவர்கள் தூக்கிலிட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வர 1889-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி வரை தொழிலாளர்களின் சர்வதேச கூட்டம் பாரிசில் நடைபெற்றது. இதில் காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். அதில் காரல் மார்க்ஸ் தான் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கவும், மே 1ஐ உலக தொழிலாளர் தினமாக கொண்டாடவும் அறைகூவல் விடுத்தார். அதன் பிறகு தான் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நம்முடைய இந்தியாவில் சமூகநீதி மண் என்றழைக்கப்படும் நமது தமிழகத்தில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது.
உழைப்பு இல்லாமல் இங்கு வேற எதுவும் கிடைக்காது. வசத்தையாக வாழ வேண்டும் என்பதற்காக மாடு போல உழைக்கிறார்கள். என்ன தான் மாடு மாதிரி உழைத்தாலும் அதற்கான பலன் என்னவோ சில முதலாளிக்கு மட்டுமே கிடைக்கிறது. இதனால் பல போராட்டங்களும், உயிரி தியாகங்களும் செய்ய வேண்டியுள்ளது.
மனிதர்கள் 16 மணி நேரம் வேலை செய்த போது எதை பற்றியும் சிந்திக்காமல் வேலை வேலை என்று மட்டுமே இருந்தார்கள். அதுவே 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என்று இருந்தால் மட்டுமே அவர்கள் மனித வாழ்வு வாழ்வதற்கான அர்த்தமாக இருக்கும் என்று காரல் மார்க்ஸ் முன்வைத்தார்.
நாடும், வீடும் வளம் பெற்று முன்னேறிட நாள்தோறும் உழைத்து கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
உழைப்பே உயர்வு தரும்
உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை
உழைப்பவரே உயர்ந்தவர்
என்று கூறி என் உரையை முடித்து கொள்கிறேன்.
உழைப்பாளர் தினம் கட்டுரை | Ulaipalar Dhinam Katturai in Tamil
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |









