டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..?

Toothpaste Colour Code Tamil

Toothpaste Colour Code in Tamil 

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஓன்று தான் டூத் பேஸ்ட். ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்ததும் முதலில் செய்யக்கூடிய ஒரு விஷயம் பல் துலக்குவது. அந்த காலத்தில் மக்கள் பல் துலக்குவதற்கு பற்பொடி மற்றும் வேப்பங்குச்சிகளை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இந்த காலத்தில் டூத் பேஸ்ட் கொண்டு தான் பல் துலக்குகிறார்கள். இந்த டூத் பேஸ்ட் பல வகைகளில் உள்ளது. அந்த வகையில் டூத் பேஸ்ட் கீழ் சில நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கவனித்திருக்கிறீர்களா..? இந்த பதிவின் மூலம் டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!

டூத் பேஸ்ட் குறியீடுகளின் அர்த்தம்: 

டூத் பேஸ்ட் குறியீடுகளின் அர்த்தம்

இன்றைய நிலையில் டூத் பேஸ்ட் பயன்படுத்தாத ஊர்களே கிடையாது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகி விட்டது.

அதேபோல, டூத் பேஸ்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகின்றன. இது போல நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்களை வாங்கும் போது அதன் அடி பகுதியில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் போன்ற நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? அந்த நிறங்களுக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

சிவப்பு: 

டூத் பேஸ்ட் குறியீடுகளின் அர்த்தம்

டூத் பேஸ்ட்டில் சிவப்பு நிற குறியீடு அடி பகுதியில் இருந்தால், அதில்  இயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கபட்டது டூத் பேஸ்ட் என்று அர்த்தம். இது ஆபத்து இல்லாத டூத் பேஸ்ட் என்றும் கூறலாம்.  

பச்சை:

டூத் பேஸ்ட் குறியீடுகளின் அர்த்தம்

டூத் பேஸ்ட்டின் அடிப் பகுதியில் பச்சை நிறத்தில் குறியீடு இருக்கும். இந்த  டூத் பேஸ்ட் முழுவதும் கிராம்பு, தேன், வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த பச்சை நிறம் இது பாதுகாப்பான டூத் பேஸ்ட் என்பதை குறிக்கிறது.  

நீலம்: 

நீலம்

 டூத் பேஸ்ட்டில் நீல நிறம் கொடுக்கப்பட்டிருந்தால் அது பாதுகாப்பான டூத் பேஸ்ட் ஆகும். இந்த டூத் பேஸ்ட்டில் இயற்கையும் மருத்துவமும் கலந்து இருக்கிறது என்பதை நீல நிறம் குறிக்கிறது.  

கருப்பு: 

கருப்பு

சில வகையான  டூத் பேஸ்ட்களின் அடி பகுதியில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த டூத் பேஸ்ட் முழுவதும் ரசாயன பொருட்கள் கொண்டு தாயரிக்கப்பட்டது என்பது குறிக்கிறது. இது பற்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று சொல்லபடுகிறது.  

பச்சை நிற புள்ளி: 

பச்சை நிற புள்ளி

சில டூத் பேஸ்ட்டில் பச்சை நிற புள்ளி போன்ற குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த குறியீடு சில உணவு பொருட்களிலும் இருக்கும்.  இந்த பச்சை நிற புள்ளியின் அர்த்தம், இந்த பொருள் முழுவதும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கிறது.  

இனி Tooth Paste வாங்கும் போது இதுபோன்ற நிறங்களை பார்த்து வாங்குங்கள்..!

நியூஸ் பேப்பரில் உள்ள புள்ளிகள் சொல்லும் கதை என்ன..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil