மிலாடி நபி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

Advertisement

Milad Nabi Endral Enna in Tamil | Miladi Nabi History in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மிலாடி நபி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நபிகள் நாயகம் என்ற முஹம்மது நபி அவர்கள், மனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில் அவர்களை நல்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் ஆவர். அந்த காலத்தில் இருந்த மிகவும் மோசமாக கலாச்சாரத்தை சீர்திருத்துவதற்காக அல்லாஹ்வால் அனுப்பட்ட இறை தூதர் தான் இந்த நபிகள் நாயகம்.  

நபிகள் நாயகம் அவர்களின் முழுப்பெயர் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்பதாகும். இவர் பிறந்து 6 -வது ஆண்டில் இவர் தாய் ஆமினா அவர்கள் இறந்துவிட்டார். தந்தை அப்துல்லாஹ் அவர்கள் நபிகள் நாயகம் பிறப்பதிற்கு முன்பே  இறந்து விட்டார். அதன் பிறகு இவர் சிறிய தந்தையான ஹஜ்ரத் அபுதாலிப் அவர்களின் வளர்ப்பில் வளந்து வந்தார். 

மிலாடி நபி எப்போது 2024

மிலாடி நபி என்றால் என்ன.?

மிலாடி நபி என்றால் என்ன

570-ம் ஆண்டில், இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரபி உல் அவ்வல் மாதம் என்று கூறப்படும் மூன்றாவது மாதத்தின் 12-ம் நாளில் மக்கா நகரில் நபிகள் நாயகம் அவதரித்தார். இந்த நாளைத்தான் மிலாடி நபியாக இஸ்லாமிய மதத்தினர் கொண்டாடுகின்றனர்.

நபிகள் நாயகம் பிறந்தநாள் மிலாடி நபி என்று கொண்டப்படுகிறது. நபிகள் நாயகம் ஒரு சிறந்த மனிதர் ஆவர். பிறரின் கஸ்டங்களுக்கு துணையாக இருப்பவர் நபிகள் நாயகம்.  முஸ்லீம் மத இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி. 63 வயது உடைய இவர் ரபீவுல் அவ்வல் மாதம் கிபி 632 மாதம் 12-ல் உலகை விட்டு பிரிந்தார் .இவரின் இறப்பு மற்றும் பிறப்பு ஓரே நாள் தான்.  இந்த நாளைத்தான் நாம் மிலாடி நபியாக கொண்டாடுகிறோம் .

நபிகள் நாயகம் அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவில் பிறந்து வாழ்ந்தார். முஹம்மது நபி பிறரிடம் அன்பு மற்றும் சகோதரத்துவம் போன்ற நல்ல செய்தியை மக்களிடம் பரப்பிய ஒரு மாமனிதர். இந்த மீலாடி நபி முதலில் எகிப்து அதிகாரபூர்வ விழாவாக கொண்டப்பட்டது. அதன் பிறகு,  ஷியா முஸ்லிம்களின் ஆளும் பழங்குடினர் கொண்டாடினார்கள். அதேபோல், சன்னி முஸ்லிம்கள் இந்த விழாவை கொண்டாடினார்கள். நபிகள் நாயகம் அவர்கள், முஸ்லிம்கள் மாதத்தில் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தில் 12 நாள் மக்காவில் பிறந்தார். 

மிலாடி நபி வரலாறு : 

Miladi Nabi History in Tamil

 நபிகள் நாயகம் பிறந்து மறைந்த நாளைத்தான் மீளாடி நபி என்று , கொண்டாடி வருகிறோம். இந்த விழா முதன் முதலில் எகிப்தில் தான் கொண்டாடப்பட்டது. நபிகள் நாயகம் இறந்து 600 ஆண்டுகளுக்கு பின்தான் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகையில் இந்த மீலாடி நபியும் ஒன்று. இந்த நாளில் சிறப்பு தொழுகைகள் நடக்கும். இந்நாளில் உறவினர் வீட்டிற்கு சென்று தங்களின் அன்பை பரிமாற்றிக்கொள்கின்றன. அதுமட்டுமில்லாமல் முஸ்லிம்கள் அந்த நாளில் மசூதி மற்றும் புனித தளங்களுக்கு செல்கிறார்கள். 

நபிகள் நாயகம் தன் இளம் பருவத்தில் நற்குணம் கொண்டவராகவும் இருப்பதால் அல் ஆமின் மற்றும் அஸ்ஸாதிக் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் பொருள் நம்பிக்கையாளர் மற்றும் உண்மையாளர். இவருக்கு 23 வயது இருக்கும்போது 40 வயது கதிஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 11 மனைவிகள் இருந்தார்கள். இவருக்கு 40 வயது இருக்கும் போது அல்லாஹ் இவரை இறுதி தூதராக அறிவித்தார். 

 இவர் இறை தூதர் ஆன பிறகு “நமது வணக்கத் திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே” என்று கூறி இந்த உலக மக்களுக்கு நல்வழி காட்டினார். நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன் என்று கூறினார். அதனை கேட்ட மெக்கா மக்கள் அவரை துன்புறுத்தினார்கள். இதன் காரணாமாக  அவர் 450 கிலோ மீட்டர் பயணம் செய்து மதினாக்கு சென்றார். அதன் பிறகு, மதினாவில் தான் நாயகம் அவர்களை அதிக மக்கள் ஆதரிக்க செய்தார்கள். அடுத்து, பல யுத்தங்கள் செய்து மதினா மக்களை, இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வைத்தார். 

நபிகள் நாயகம் மிகுந்த பனியுடையவர் ஆவர். பிறரின் துன்பத்தை போக்குவதில் இவரை போல் யாரும் இருக்க முடியாது. இவர் 63 வயது வரை மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தார். இவர் கி.பி.632 -ல் ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் தேதியில் இறந்தார். அவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளில் தான். இந்த நாளையே மிலாடி நபி என்று கொண்டாடி வருகிறார்கள். 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement