Miladi Nabi 2024 Date Tamil | மிலாடி நபி எப்போது 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு 2024 மிலாடி நபி எப்போது வருகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மிலாடி நபி என்பது இஸலாமியர்கள் கொண்டாடும் விழா ஆகும். அதாவது நபிகளின் பிறந்தநாள் மிலாடி நபி என்று கூறப்படுகிறது. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். மிலாடி நபி அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது. எனவே மிலாடி நபி எப்போது வருகிறது என்பதை இப்பதிவின் வாயிலாக படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
Miladi Nabi 2024 Tamilnadu | Miladi Nabi 2024 Date Change Tamilnadu:
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மிலாடி நபி செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மிலாடி நபி செப்டம்பர் 17 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிலாடி நபி தேதி செப்டம்பர் 16 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று மிலாடி நபி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் கூறிய அறிவிப்பை கேட்டு மிலாடி நபி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 04 ஆம் தேதி ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தெரியாததால் செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை ஏற்று தமிழக அரசு, தற்போது செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் அரசு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தலைமை செயலர் நா.முருகானந்தம் அவர்கள் “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இந்த பொது விடுமுறை ஆனது, அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |