மிளகாய் பற்றிய விவரங்கள்
இந்தியாவில் அதிகம் மிளகாய் உற்பத்தி செய்யும் மாநிலம் ஆந்திரப்பிரதேசம் ஆகும். இந்தியாவின் மிளகாய் உற்பத்தியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது மிளகாய் உற்பத்தியில் 57% முக்கிய பங்கு வகிக்கிறது. இவை தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா,குஜராத் கர்நாடகா போன்ற நாடுகளுக்கு பச்சை மிளகாய் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. இந்த வகை மிளகாய் உணவிற்கு இயற்கையான நிறத்தை அளிக்கிறது.
மேலும்,நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7,92,000 ஹெக்டேர் மிளகாய் பயிர்ப்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13,76,000 மில்லியன் டன்களுக்கு மேல் சிவப்பு மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு அது பல்வேறு வடிவங்களில் மாற்றப்படுகிறது. நாட்டின் 22% சதவீதம் உலர்ந்த மிளகாய் பங்களிக்கிறது. மிளகாய் உற்பத்தியில் 70% உள்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. மிளகாய் உற்பத்தியில் முதல் மாநிலமாக திகழ்வதுடன்,உலகின் மிக பெரிய மிளகாய் சந்தையாக உள்ளது. 2023-2024 ஆண்டிற்கான மிளகாய் உற்பத்தியில் முதலிடமாக உள்ளது.2025 ஆம் ஆண்டில் 20% மிளகாய் உற்பத்தி குறையலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
10 வகையான மிளகாய்
- காஷ்மீர் மிளகாய்
இது காஷ்மீர் அருகில் உள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் மிளகாய் செடியாகும்.இது அதிக சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது.இதை உணவிற்கு பயன்படுத்தும்போது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கிறது.இதில் காரம் குறைவாக இருக்கும். இதனால் தான் சமையல் நிபுணர்கள் அனைத்து விசேஷங்களுக்கும் காஷ்மீர் மிளகாய் பயன்படுத்துகின்றன.இது உணவில் நல்ல தோற்றத்தை அளிக்க பயன்படுகிறது.
- ஆந்திரப்பிரதேசம் ,குண்டூர் மிர்ச்சி
இந்த வகை மிளகாய் உற்பத்தியில் குண்டூர் மிர்ச்சி யார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மிளகாய் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும் இது குண்டூர் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது.குண்டூர் நாட்டின் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும்.இது உணவில் அதிகமான கார சுவையை கொண்டுள்ளது. ஆந்திராவில் அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
- பையத்கி மிளகாய்,கர்நாடகா
இந்தியாவில் இது உலர்ந்த சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது.இந்த வகை மிளகாய் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது. காஷ்மீர் மிளகாய் போலவே இதுவும் உணவிற்கு நல்ல நிறத்தை அளிக்கிறது.இது குறைவான காரத்தை உடையது.மேலும் ,இது காஷ்மீர் மிளகாய் போல தோற்றத்தை கொண்டியிருக்கும்.
- போரிய மிளகாய் ,தமிழ்நாடு
இந்தியாவில் உலர் சிவப்பு மிளகாய் பல அளவுகளை கொண்டுள்ளது.இது மிதமான காரத்தன்மையை கொண்டுள்ளது. இந்தியாவில் பல உணவுகளில் கலப்படம் செய்வதற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- பூட் ஜோலோகியா ,வடகிழக்கு இந்தியா
பூட் ஜோலோகியா உலகின் மிக காரமான மிளகாய் ஆகும்.இந்த வகை மிளகாய் 2007ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெற்றது.இதற்கு பேய் மிளகு என்றுமற்றொரு பெயர் உண்டு.இந்த வகை மிளகாய் அசாம்,அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற பகுதிகளில் வளர்க்கபடுகிறது.இது அசைவ உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
- ஜ்வாலா மிளகாய்,குஜராத்
இது குஜராத்தின் தெற்கு பகுதியான மெஹ்சானா ,கேடாவில் வளர்க்கப்படுகிறது.இந்த வகை மிளகாய் ஃபிங்கர் பெப்பர் என்று அழைக்கப்படுகிறது.மேலும் இந்தியா சுவையில் காணப்படும் மிளகாய் ஆகும்.
- காந்தாரி மிளகாய் கேரளா
இந்த மிளகாய் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகிறது.இது தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தபடுகிறது.இது உணவில் நல்ல சுவையை தருகிறது.இது பறவை கண் மிளகாய் என்று அழைக்கப்படுகிறது.
- சங்கேஸ்வரி மகாராஷ்டிரா
இந்த வகை அதிக சிவப்பு நிறத்தை கொண்டியிருக்கும். இது மகராஷ்ட்ராவின் கோலாப்பூர் பகுதியில் வளர்க்கப்படுகிறது.இது முக்கியமாக கடலோர பகுதி உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது கரம் மசாலா போன்ற பிற மசாலா பொடியுடன் சேர்க்கப்படுகிறது.
- மாதனியா மிர்ச்,ராஜஸ்த்தான்
இந்த வகை மிளகாய் சிவப்பு நிறத்தை கொண்டியிருக்கும். இது மிகவும் காரமான நிறத்தை உடையது.இது ராஜஸ்தான் உணவுகளில் சேர்க்கப்படுகிறது.இது இந்தியாவில் வளர்க்கப்படும் மிளகாய் வகைகளில் ஒன்றாகும்.
- தானி ,மணிப்பூர்
மணிப்பூர் விளையும் தனி மிளகாய் மிகவும் காரமான சுவையை கொண்டிருக்கும்.இது கொல்கத்தாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பலவகையான மிளகாய் பயிரிடப்படுகின்றன.
இயற்கை விவசாயத்தில் இன்று குடைமிளகாய் சாகுபடி முறை
மிளகாய் தன்மைகள்
- நடுத்தரம் மற்றும் மிதமான காரதன்மையை கொண்டவை வழக்கமான மிளகாய்
- அதிக நிறம் மற்றும் அதிக காரத்தன்மையை கொண்டவை கார மிளகாய்
- அதிக நிறம் மற்றும் குறைவான காரத்தன்மையை கொண்டவை காஷ்மீர் மிளகாய்.
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |











