பால் நெருஞ்சில் பற்றிய சில தகவல்கள் | Milk Thistle in Tamil..!

Advertisement

Milk Thistle in Tamil

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாடுகளில் சில வகையான மூலிகைகளை சேர்த்து கொள்வோம். ஏனென்றால் மூலிகைகளை சேர்த்து கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆனது ஆரோக்கியமாக இருக்கும் என்ற காரணத்தினால் தான். அதன் படி பார்க்கும் போது இன்னும் ஏராளமான மூலிகை செடிகள் நமக்கு தெரியாமலே இடம் பெற்றுக்கிருக்கிறது. அத்தகைய செடிகளில் பால் நெருஞ்சில் செடி ஆகும். இதனை ஆங்கிலத்தில் Milk Thistle செடி என்று அழைப்பார்கள். இந்த மில்க் திஸ்டில் செடியினை பற்றி பெரும்பாலோனோருக்கு சரியாக தெரிவது இல்லை. அதனால் தான் இன்று நாம் பால் நெருஞ்சில் பற்றிய முழு தகவலையும் பயனுள்ளவாறு இருக்கும் படி தெளிவாகவும், விரிவாகவும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மில்க் திஸ்டில் செடி பற்றிய தகவல்:

மில்க் திஸ்டில் செடி பற்றிய தகவல்

உடலுக்கு நன்மையினை அளிக்கக்கூடிய மூலிகை செடிகளில் பால் நெருஞ்சில் செடியும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த செடி ஆனது ஆஸ்டெரேசி என்ற குடும்பத்தினையும், சிலிபம் என்ற இனத்தினையும் சார்ந்தது ஆகும்.

இந்த பால் நெருஞ்சில் தாவரம் ஆனது இருபது ஆண்டு தாவரம் ஆகும். இத்தகைய செடி ஆனது ஆசியா மற்றும் ஐரோப்பியாவை தாயகமாக கொண்டிருந்தாலும் கூட தற்போது நாடுகளிலும் பரவி இருக்கிறது.

பொதுவான பெயர்கள்:

  • மேரி திஸ்டில்
  • செயின்ட் மேரி திஸ்டில்
  • ஸ்காட்ச் திஸ்டில்
  • வண்ணமயமான திஸ்டில்
  • மெடிட்டரேனியன் பால் திஸ்டில்
  • மரியன் திஸ்டில்
  • மில்க் திஸ்டில்

மேலே சொல்லப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் பால் நெருஞ்சில் செடிக்கான பொதுவான பெயர் ஆகும்.

செடியின் வடிவமைப்பு:

மில்க் திஸ்டில் செடி ஆனது கூம்பு போன்ற வடிவத்தினையும், 30 செ.மீ முதல் 200 செ.மீ உயரமும், 12 முதல் 79 அங்குலம் வரை பால் நெருஞ்சில் செடி வளரும் தன்மை கொண்டிருக்கிறது.

இதனுடைய இலைகள் நீளமாகவும், ஈட்டி போன்ற வடிவத்தினையும் கொண்டிருக்கும். மேலும் அந்த இலையில் உள்ள நரம்புகள் அனைத்தும் பால் வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

பால் நெருஞ்சில் மூலிகை செடியில் இருக்கும் பூக்கள் அனைத்தும் ஊதா மற்றும் சிவப்பு நிறத்திலும், 4 செ.மீ முதல் 12 செ.மீ வரை நீளமும், அகலத்துடனும் அமைந்து இருக்கும்.

ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவீர்களா.. அப்போ இந்த விஷயம் தெரியுமா 

பால் நெருஞ்சில் சாகுபடி:

information about milk thistle in tamil

இந்த செடியினை சாகுபடி செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலே மண் கலவை இருந்தாலே போதும். மேலும் இவை வறட்சியை எதிர்க்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

சுமார் 40 செ.மீ முதல் 75 செ.மீ இடைவேளி விட்டு 1 செ.மீ முதல் 1.5 செ.மீ ஆழத்தில் இதனுடைய விதைகளை விதைக்க வேண்டும். ஆனால் வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் வெப்பநிலை என்பது கட்டாயமாக 2 டிகிரி செல்சியஸ் வரை இருத்தல் வேண்டும்.

இதற்கான உரம் என்று பார்த்தால் 1 ஹெக்டருக்கு 60 kg பொட்டாசியம், 50 Kg நைட்ரஜன் மற்றும் 30 Kg பாஸ்பரஸ் அளிக்க வேண்டும்.

மேலும் பால் நெருஞ்சில் சாகுபடிக்கான அறுவடை காலம் என்பது ஜூலை, ஆகஸ்ட் மாதம் ஆகும். இந்த சாகுடியில் நீங்கள் நினைத்தது போல நல்ல மகசூல் மற்றும் வருமானத்தை பெறலாம்.

இத்தகைய மூலிகை செடி ஆனது நம்முடைய உடலில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த நன்மையினை அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது.

எள்ளை சாப்பிடுவதற்கு முன்பாக அதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.. 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement