தினை வகைகள் மற்றும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Millets Types in Tamil

வணக்கம் நண்பர்களே..! நமது பாரம்பரிய உணவுகளில் முக்கியமான ஒன்றான தினை வகைகள் மற்றும் அதன் பயன்களை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். பண்டைய காலத்தில் தினையை உபயோகப்படுத்தும் முறைகள் அதிகமாக இருந்தன. நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் இந்த தினை வகைகள் தான்.  அத்தகைய தினைகள் இந்தியா, சீனா மற்றும் நைச்சீரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்கின்றன. இதில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. சரி வாங்க தினை வகைகள் மற்றும் அதன் பயன்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சிறுதானிய வகைகள் மற்றும் பயன்கள்:

தினைகள் மொத்தம் ஏழு வகைப்படும். அதன் வகைகள் மற்றும் பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தினை வகைகள்:

  1. திணை அரிசி 
  2. கேழ்வரகு 
  3. சாமை அரிசி 
  4. குதிரைவாலி அரிசி 
  5. வரகு அரிசி 
  6. கம்பு அரிசி 
  7. சோளம் 

தினை பயன்கள்:

திணை அரிசி பயன்கள்:

திணை அரிசி

திணை அரிசி இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கும் மற்றும் கண் பார்வை தெளிவாக தெரிவதற்கும் பயன்படுகிறது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் திணையை கூழாக செய்து குடித்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். 

 புரதம், வைட்டமின் A, வைட்டமின் B, மாவுச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது திணை அரிசியாகும்.  

அதுபோல திணையில் இட்லி, பணியாரம், பாயசம், அதிரசம் மற்றும் அல்வா போன்ற அனைத்து உணவுகளும் செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு பயன்கள்:

கேழ்வரகு

 

சாதாரணமாக நாம் சாப்பிடும் அரிசி மற்றும் கோதுமையை விட கேழ்வரகிழ் நிறைய சத்துக்கள் இருக்கின்றன.

இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து போன்ற சத்துக்களும் இருப்பதால் எலும்பு தேய்மானம், மலச்சிக்கல் மற்றும் இரத்தசோகை ஆகிய பிரச்சனைகளுக்கு நல்ல பலனை தருகிறது.

உடல் எடை குறைவு, செரிமான கோளாறு, குடல் புண், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாதவிடாய் கோளாறு ஆகியவர்கள் கேழ்வரகை களியாக செய்து சாப்பிட்டால் உடலிற்கு நல்லது.

சாமை அரிசி பயன்கள்:

சாமை அரிசி

சாமை அரிசியில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இத்தகைய சாமை அரிசி வயிறு பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் இரத்த சோகை ஆகியவற்றைக்கு விரைவில் நல்ல பலனை தருகிறது.

குதிரைவாலி அரிசி பயன்கள்: 

குதிரைவாலி

 

புரதச்சத்து, இரும்பு சத்து, நார்ச்சத்து போன்ற மூன்றையும் உள்ளடக்கியவை குதிரைவாலி அரிசியாகும்.

இந்த குதிரைவாலி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோய, இதயம் தொடர்பான நோய், இடுப்புவலி, வயிறு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை வராமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

வரகு அரிசி பயன்கள்:

வரகு அரிசி அதிகமான புரதம் மற்றும் தாது உப்புக்கள் இருப்பதால் செரிமான தன்மை கொண்டது.

அதிக உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக சர்க்கரை நோய் ஆகியவற்றை குறைப்பதற்கு வரகு அரிசி பயன்டுகிறது.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

கம்பு அரிசி பயன்கள்:

கம்பு அரிசி

கம்பு அரிசியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால் இது உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.

அதுபோல உடல் சூடு, சோர்வு, வயிற்று புண், தேவையற்ற கொழுப்பு போன்றவற்றை குறைக்கவும் கம்பு அரிசி பயன்படுகிறது.

சிறுநீர் பெருக்கியில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்க கம்பு அரிசி உதவுகிறது.

சோளம் பயன்கள்:

சோளம்

சோளம் உடல் எடை அதிகரிக்கவும், சர்க்கரை நோயை குறைக்கவும் மற்றும் உடலில் உள்ள உப்பை குறைக்கவும் உதவுகிறது.

தோலில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சோளம் உகந்தது அல்ல.

சோளத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புசத்து ஆகிய மூன்று சத்துக்களும் அடங்கியிருக்கிறது.

பனங்கற்கண்டு பயன்கள்
மரங்கள் மற்றும் அதன் பயன்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement