Mistakes We Make Everyday in Tamil
நம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் சில செயல்களை செய்கின்றோம். அதாவது காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்கும் வரையும் பல செயல்களை செய்கின்றோம். அப்படி நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் சரியாகத்தான் செய்கிறோமா என்றால்..? இல்லை என்றே தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாம் அனைவருமே சரி என்று நினைத்து செய்கின்ற செயல்கள் அனைத்துமே தவறு. நாம் அன்றாடம் செய்யும் செயல்களை எல்லாம் எப்படி செய்ய வேண்டும்.? எப்படி செய்யக்கூடாது.? என்று இப்பதிவில் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. பல் துலக்கும் போது செய்யும் தவறு:
பொதுவாக அனைவருமே காலையில் எழுந்ததும் முதலில் பல் விலக்குவோம். அப்படி விலக்கும் போது டூத்பிரஷில் நிறைய டூத்பேஸ்ட் வைத்து விலக்குவோம். இப்படி விலக்கினால் தான் பல் வெள்ளையாக இருக்கும் என்று இதை செய்வோம்.
ஆனால் இது முற்றிலும் தவறான செயல். தினமும் அதிகமாக டூத்பேஸ்ட் வைத்து பல் விலக்கினால் பற்களில் மேல் உள்ள எனாமல் விரைவில் தேய்ந்து விடுகிறது. இதனால் பற்கூச்சம் ஏற்பட்டு சூடாகவோ அல்லது குளிர்ந்த பொருட்களையோ சாப்பிட முடியாமல் போகிறது. எனவே டூத்பிரஷில் குறைவான அளவே டூத்பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டும். இப்படி செய்தால் தான் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
25 வயதில் செய்யக்கூடாத 5 தவறுகள்..! |
2. குளிக்கும் போது செய்யும் தவறு:
தினமும் குளிக்கும் போது நிறைய பேர் வெந்நீரில் தான் குளிப்பார்கள். இது மிகவும் தவறான செயல். தினமும் நாம் சூடான நீரில் குளிக்கும் போது நம் தோலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் இறந்து போய்விடும்.
இதனால் தோல் வறட்சியடைந்து தோல் சுருக்கமடைந்து வெடிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் தொடர்ச்சியாக அதிக சூடான தண்ணீரில் குளித்து வந்தால் தோலில் அரிப்பு ஏற்பட்டு தோல் வியாதிகள் ஏற்படுகிறது.
எனவே தினமும் சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்த்து விடுங்கள்.3. தூங்கி எழுந்ததும் செய்யக்கூடிய தவறு:
இந்த காலத்தில் போன் இல்லாமல் எவராலும் இருக்க முடியாது. தினமும் காலையில் எழுந்தவுடன் பலபேர் செய்கின்ற முதல் செயல் போன் பார்ப்பது தான். உலகத்தில் உள்ள 25% மக்கள் தூங்கி எழுந்த 1 நிமிடத்திற்குள் மொபைல் போனை எடுத்து மெசேஜ், நோட்டிபிகேஷன் போன்றவற்றை பார்க்கிறார்களாம்.
தூங்கி எழுந்ததும் போனை பார்ப்பதால் மன அழுத்தம் அதிகமாகிறது என்று கூறுகிறார்கள். இதனால் அதிகமாக கோபப்படுவது, உடல் சோர்வு, அதிகமான மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகிறது. இதனால் தூங்கி எழுந்ததும் போன் பார்ப்பதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.4. சமைப்பதில் செய்யும் தவறு:
தினமும் சில பேர் முட்டை சாப்பிடுவார்கள். இது மிகவும் நல்ல விஷயம் தான். முட்டையில் வைட்டமின் கால்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என்பதற்காக சில பேர் நிறைய முட்டைகளை வாங்கி தண்ணீரில் கழுவி பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது சமைத்து சாப்பிடுகிறார்கள்.
முதலில் முட்டைகளை கழுவவே கூடாது. ஏனென்றால் முட்டைகளில் மேல் கியூட்டிகள் என்ற பகுதி இருக்கும். இந்த பகுதிதான் முட்டைகளில் பாக்டீரியாக்கள் வராமல் தடுக்கிறது.
நீங்கள் முட்டையை தண்ணீரில் கழுவி வைத்தால் முட்டைகள் விரைவில் வீணாகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களுக்கு முட்டைகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய பிரச்சனைகள் வரும்.
அப்படி குறைந்த நாட்களில் வைத்தாலும் கூட முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே சமைக்கக்கூடாது. 30 நிமிடங்கள் கழித்து தான் சமைக்க வேண்டும்.
முட்டையை பிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்த்து விடுங்கள். சமைக்கும்போது மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.
நீங்கள் தினமும் பயன்படுத்தும் AC-யில் செய்யக்கூடாத 8 தவறுகள் தெரியுமா…? |
5. மலம் கழிப்பதில் செய்யும் தவறு:
தினமும் மலம் கழிக்க இந்தியன் டாய்லெட் மற்றும் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துகின்றோம். ஆனால் இதில் எது நல்லது. உலகத்தில் உள்ள நிறைய மக்கள் வெஸ்டர்ன் டாய்லெட் தான் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறு.
வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழிக்கும் போது நம் உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறுவதில்லை. இதனால் நம் வயிற்று பகுதில் பல வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்கள் மலம் கழிக்கும் போது ஒரு ஸ்டூல் போட்டு அதில் கால் வைத்து மலம் கழிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.
பெரும்பாலும் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். நாம் காலை மடக்கி வைத்து மலம் கழிக்கும் போது தான் உடல் கழிவுகள் முற்றியலுமாக வெளியேறுகிறது. நம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எனவே இந்தியன் டாய்லெட்டில் மலம் கழிப்பதுதான் நம் உடலுக்கு நல்லது.
6. தூங்கும்போது செய்யும் தவறு:
பொதுவாக நிறைய பேருக்கு குப்புற படுத்து தூங்கும் பழக்கம் இருக்கும். குப்புறப்படுத்து தூங்குவதால் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குப்புற படுக்கும்போது நம் வயிற்று பகுதி அழுத்தியே இருக்கும். இதனால் இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதோடு வயிற்றில் ஜீரண கோளாறுகளும் ஏற்படுகிறது. எனவே தூங்கும் போது ஒரு புறமாக திரும்பி தான் படுக்க வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |