Mobile Number Tricks in Tamil
ஸ்மார்ட்போன் இல்லாத அன்றாட வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. பயனர்களின் கைகளில் எப்போதும் மொபைல் போன்கள் இருக்கும். வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்புவது, மின்னஞ்சல் அனுப்புவது, பள்ளி வேலை அல்லது அலுவலக வேலை என எதுவாக இருந்தாலும் சரி. தற்போது அனைவரும் ஸ்மார்ட்போனை நம்பியே உள்ளனர் என்று தான் கூற முடியும். இருப்பினும் இந்த ஸ்மார்போன் நம்மிடம் இருந்தாலும் அதற்கு சிம் என்ற ஒன்று அவசியம் தேவைப்படும் ஒன்றாகும். இந்த சிம்கார்டு பொறுத்தவரை பல தொலைதொடர்பு நிறுவனங்கள் பல வகையான மொபைல் எண்களை கொண்டு சிம்கார்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஜியோ, ஏர்டெல், ஏர்செல், ஐடியா, வோடபோன் என்று நிறைய நிறுவங்கள் விற்பனை செய்கிறது. இந்த மொபைல் நம்பரை பயன்படுத்தி உங்கள் வயதை மிக எளிதாக சொல்லிவிடமுடியும். அந்த ட்ரிக்ஸை தான் நான் இந்த பதிவில் சொல்ல போகிறேன். இந்த ட்ரிக்ஸை யாரு கண்டுபிடிச்சாங்கன்னு சரியாக தெரியவில்லை. எனக்கு என்னோட உறவினர் ஒருவர் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிருந்தாங்க. நானும் ட்ரை செய்து பார்த்தேன். என்னோட வயதை சரியாக கணக்கிட்டு காட்டியது. அதனால உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என இங்கு பதிவு செய்துளேன் நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன் ஒரு முறை..
Mobile Number Tricks in Tamil
1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி இலக்கு எண்ணினை எடுத்துக்கொள்ளுங்கள்.
2) அந்த எண்ணை 2 ஆல் பெருக்க வேண்டும்.
3) பின் அந்த எண்ணுடன் 5-ஐ கூட்ட வேண்டும்.
4) கூட்டி வரும் எண்ணை 50 ஆல் பெருக்கி கொள்ளுங்கள்.
5) நீங்கள் பெறும் எண்ணுடன் 1772 ஐ கூட்டி கொள்ளுங்கள்.
6) பெறப்பட்ட எண்ணிலிருந்து உங்கள் பிறந்த ஆண்டைக் கழிக்கவும்.
7) இப்பொழுது நீங்கள் 3 இலக்கங்களைப் பெறுவீர்கள். முதலாவது உள்ள என் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி இலக்கம். மற்ற இரண்டு உங்கள் வயது. உங்கள் Age சரியாக வந்திருக்கிறதா? நண்பர்களே.. பாருங்கள் என்னென்ன ட்ரிக்ஸ்லாம் கண்டுபிடிக்கிறாங்கனு.
உதாரணத்திற்கு எனது வயதை நான் கணக்கிடுகிறான் பாருங்களேன்.
என்னோட மொபைல் நம்பர் 1 இந்த எண்ணினை இரண்டால் பெருகினால் 1X2=2 விடை இரண்டு என வரும் அதன் பிறகு இதனுடன் ஐந்தை கூட்டிக்கொள்கிறேன் 2+5+7, கூட்டிய பிறகு வந்த விதையுடன் 50 பெருகிக்கொள்கிறான் 7X50=350. இந்த 350-வுடன் 1772-ஐ கூட்டி கொள்கிறேன் 350+1772=2122. பிறகு இந்த 2122-வுடன் எனது பிறந்த ஆண்டை கழித்து கொள்கிறேன் 2122-1994=128 இப்பொழுது நான் 3 இலக்கங்களைப் பெற்றேன். முதலாவது உள்ள எண் எனது மொபைல் எண்ணின் கடைசி இலக்கம். மற்ற இரண்டு எண்களும் எனது வயது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |