மொக்கையான தமிழ் விடுகதைகள்…! | Mokka Vidukathai in Tamil With Answer..!
தமிழை பொறுத்தவரை நாம் நிறைய படித்து இருப்போம். அப்படி நாம் படித்ததில் நிறைய விஷயங்கள் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருக்கும். மற்ற சிலவை நகைச்சுவை உணர்வுடன் இருக்கும். அதிலும் குறிப்பாக சிலர் சிந்திக்க வையகம் முறையில் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் மொக்கையான சில கேள்விகளை கேட்பார்கள். அத்தகைய கேள்விகள் அனைத்தும் மொக்கையாக இருந்தாலும் கூட நம்மை கொஞ்சம் மகிழ்விக்கும் வகையில் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான தமிழ் மொக்க விடுகதைகளும் அதற்கான பதிலையும் இன்றைய பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
மொக்கையான தமிழ் விடுகதைகள்
- மரியாதை இல்லாத ஊர் எது தெரியுமா..?
விடை: போடி
2. உண்ண முடியாத பன் எது..?
விடை: ரிப்பன்
3. உட்கார முடியாத தரை எது..?
விடை: புளியோதரை
4. ஏன் தூங்குவதற்கு முன்பாக குட்நைட் சொல்கிறோம் தெரியுமா..?
விடை: தூங்கினால் சொல்ல முடியாது அதனால் தான்.
5. பத்து பெண்கள் ஒரே குடையில் நின்றனர். ஆனால் அவர்கள் யாரும் நனையவில்லை ஏன்.?
விடை: ஏன்னா மழையே வரவில்லையாம்.
6. ஒருவர் வெளியில் செல்லும் போது திடீரென்று மழை வந்துவிட்டது. ஆனால் அவர் தலை மட்டும் ஈரம் ஆகவில்லையான் ஏன் தெரியுமா..?
விடை: ஏன்னா அவர் தலை வழுக்கை தலை.
7. காலை உணவின் போது நீங்கள் சாப்பிட முடியாது உணவு எது தெரியுமா..?
விடை: மதியம் மற்றும் இரவு உணவு.
8. குறைக்குற நாய் கடிக்காது ஏன்..?
விடை: ஏன்னா ஒரே நேரத்துல இரண்டு வேலையை செய்ய முடியாது அதனால் தான்.
9. உலகத்திலேயே பெரிய Trouser எது தெரியுமா..?
விடை: Bulltrouser தான்.
10. Coffee உடம்புக்கு நல்லது இல்லைனு ஏன் சொல்றாங்க தெரியுமா..?
விடை: அதுல 2 e இருக்கு அதனால் தான்.
11. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
விடை: தேள்
12.பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
விடை: தலைமுடி
13.உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
விடை: வெங்காயம்
14.கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
விடை: கரும்பு
15.மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
விடை: விழுது
16.இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
விடை: பட்டாசு
17.ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
விடை: மூச்சு
18.கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
விடை: பூரி
19.பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
விடை: வெண்டைக்காய்
20.உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
விடை: பெயர்
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் |
சுவாரஸ்யமான சில தமிழ் விடுகதைகள் உங்களுக்காக இதோ..! |
விடுகதைகள் | Vidukathaigal |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
விடுகதை விளையாட்டு விடைகள் |
கணக்கு விடுகதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |