முருங்கை கீரையை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சி வைச்சிருக்கணும்..!

Advertisement

Moringa in Tamil

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்..! நமது பொதுநலம்.கம பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு பயனடைந்து வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் மிக மிக விரும்பி அல்லது விருப்பமே இல்லாமல் உண்ணும் உணவுகளை பற்றிய நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொருளை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு. அதாவது ஒரு பொருளின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், பயன்கள் போன்றவற்றை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் முருங்கை மரத்தின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Moringa Tree Information in Tamil:

Moringa Tree Information in Tamil

இந்த முருங்கை மரமானது மோரிங்கேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இந்த முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ ஆகிய உணவாக உண்ணப்படுகிறது.

இது பொதுவாக 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை நமக்கு கிடைக்கும்.

மேலும் இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது. பொதுவாக முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது என்றாலும் மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது.

மாதுளை பழத்தினை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முருங்கையின் வகைகள்:

  • யாழ்ப்பாண முருங்கை
  • சாவகச்சேரி முருங்கை
  • பால் முருங்கை
  • பூனை முருங்கை
  • குடுமியான் மலை 1
  • பெரியகுளம் 1 

போன்ற வகை முருங்கைகள் உள்ளது. மேலும் ஒவ்வொரு வகைக்கும் தனித்துவமான சுவை மற்றும் சத்துக்கள் உண்டு. அது போல் சில வகைகளுக்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு.

பெயர்க்காரணம்:

அதாவது முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. அதாவது எளிதில் முருங்குவது ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் என்பதை குறிப்பதற்காக தான் இந்த பெயர் அதற்கு சூட்டப்பட்டது.

சேப்பக்கிழங்கினை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்

பிறப்பிடம்:

Moringa tree plant in Tamil

இதன் பிறப்பிடம் என்று ஒன்று சரியாக அறியப்படவில்லை. ஆனால் இதன் ஆரம்பம் எங்கெல்லாம் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது முருங்கையின் ஆரம்பம் இமயமலை அடிவாரம், பாக்கித்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானித்தான் ஆகும்.

அதன் பிறகு பிலிப்பைன்சிலும், ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. தற்போது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

மேலும் இலக்கை, தாய்லாந்து மற்றும் தைவானிலும் பயிராகிறது.

வேறுபெயர்கள்:

இது மோரிங்கா ஒலிஃபெரா (Moringa oleifera) என்ற அறிவியல் பெயரையும், குதிரைவாலி மரம், முருங்கை மரம், ஆப்பிரிக்க முருங்கை, முள்ளங்கி மரம், அரங்கோ, படும்பு, பென், பென்ட்ரீ, பென் ஆயில் மரம், கரகுவா, முருங்கை, முரின்னா, மோரிங்கோ, லா மு ஷு, மரங்காகாலு மற்றும் டெபெரிண்டோ போன்ற பிற பெயர்களையும் கொண்டுள்ளது.

கருணைக்கிழங்கினை சாப்பாட்டில் அதிக அளவு சேர்த்து கொள்வீர்களா அப்போ இதை கண்டிபாக தெரிஞ்சிகோங்க

ஊட்டச்சத்துக்கள்:

முருங்கையில் வைட்டமின் A, வைட்டமின் B, இரும்பு சத்து, மினரல், அமினோ அமிலம், கால்சியம், பொட்டாசியம், புரோட்டீன் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பயன்கள்:

தினமும் முருங்கை கீரையை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், ஆர்திரிடிஸ், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

மேலும் முருங்கையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டு செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், உடலில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்த உதவுகிறது.

தினமும் முருங்கை கீரையை சாப்பிடுவதால் பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

அதேபோல் இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

சவ்வரிசியை சாப்பிட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிவச்சிக்கோங்க

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement