சாத்துக்குடியை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..! | Mosambi in Tamil

Advertisement

Mosambi Fruit in Tamil | சாத்துக்குடி பற்றிய தகவல்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த சாத்துக்குடி பற்றிய சில தகவல்களை தான். பொதுவாக நாம் அனைவருக்குமே சாத்துக்குடி பழம் தெரிந்திருக்கும். ஆனால் சாத்துக்குடியின் வேறுபெயர்கள் மற்றும் அதன் பிறப்பிடம் போன்ற தகவல்களை பற்றி தெரிந்திருக்காது. அதனால் இன்றைய பதிவில் சாத்துக்குடி பற்றிய தகவல்களை விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mosambi Fruit in Tamil:

Mosambi fruit in tamil

சாத்துக்குடி பழம் (Citrus Limetta) என்ற சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்று. இது மெக்சிக்கோ நாட்டின் எலுமிச்சை மற்றும் இனிப்பு சிட்ரஸின் கலவையாகும். பொதுவாக சாத்துக்குடி மரங்கள் 26 அடி (8 மீ) உயரம் வரை வளரும் சிறிய மரம் ஆகும்.

அவை பழுப்பு-சாம்பல் நிறம் கொண்ட பட்டைகளையும், இவற்றின் கிளைகள் சீராக அமைந்திருக்காது, மேலும் சுமார் 1.5 – 7.5 செ.மீ அளவில் பல முட்களையும் கொண்டிருக்கும். 

இதில் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். பின்னர் இந்த பூக்கள் முற்றி மஞ்சள் மற்றும் பச்சை நிறமும் கலந்த சாத்துக்குடி பழங்களாக காய்க்கும். இந்த சாத்துக்குடி மரம் பெரும்பாலும் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலா பகுதிகளில் நன்கு வளர்கின்றன.

பொதுவாக இந்த சாத்துக்குடி மரங்கள் 5-7 வயதிலேயே பழங்களை அளிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனாலும் 10-20 வயதிற்கு பிறகுதான் நிறைய பழங்களை அளிக்கின்றது.    

பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:

சாத்துக்குடியின் பிறப்பிடங்கள் என்று குறிப்பிட்டு சொல்லுவதற்கு இல்லை. ஆனால் இவைகள் தென் மற்றும் தெற்கு ஆசியாவில் தோன்றியிருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பிராந்தியங்களில் வளர்க்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் எகிப்து, சிரியா, பாலஸ்தீனம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் வளர்க்கபடுகிறது.

இவைகள் பல இடங்களில் பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. அவற்றில் சில லீமு ஷிரின் (ஈரான்), மொசாம்பி (வட இந்தியாவில்), முசும்பி (கிழக்கு இந்தியாவில்), சாத்துக்குடி(தமிழ்நாடு), பெர்கமோட் (பிராஞ்சு).

ஊட்டச்சத்துக்கள்:

பொதுவாக மற்ற சிட்ரஸ் வகை பழங்களைப் போலவே சாத்துக்குடியிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. சுமார் 100 கிராம் சாத்துக்குடியில், குறைந்தபட்சம் 50 மில்லி கிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இதை தவிர பொட்டாசியமும், பாஸ்பரசும் உள்ளன.

 சாத்துக்குடி ஜூஸ் நன்மைகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement