உலகின் மிக ஆபத்தான நாய்கள்

Advertisement

Most Dangerous Dogs in Tamil | ஆபத்தான  நாய்கள்

Most Dangerous Dogs in Tamil – வணக்கம் இந்த உலகில் ஆபத்தான விஷயங்கள் நிறைய இருக்கின்றது. அதனை தெரிந்து கொள்ளும் போது மிகவும் விசித்திரமாகவும் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் உலகின் மிக ஆபத்தான நாய்கள் பற்றிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். நாய்கள் என்றாலே நன்றி உள்ள ஜீவன் என்று சொல்வார்கள், மிகவும் பாசமாக இருக்கும். நாம் அதை விட்டு விட்டு எங்காவது சென்றால் மிகவும் அழுகும். இந்த உலகில் 340-க்கு மேற்பட்ட நாய் இனங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாய் இனத்திற்கும் ஒவ்வொரு வகையான திறமை இருக்கும். சில நாய்கள் வேகமாக ஓடும், சில நாய்கள் நன்கு மோப்பம் பிடிக்கும். சரி வாங்க உலகின் மிக ஆபத்தான நாய்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.

Dangerous Dogs in Tamil

Dogo Argentino:

dogo argentino

பொதுவாக சாதாரண நாய்களுக்கு கடிக்கும் திறன் 250 PSI வரை இருக்குமாம். ஆனால் இந்த Dogo Argentino நாய்க்கு கடிக்கும் திறனானது 500 PSI வரை இருக்குமாம். இந்த வகை நாய்கள் அனைத்துமே வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இருக்குமாம். இந்த Dogo Argentino உடல் அமைப்பானது, நல்ல வலிமையாக பாடிபில்டர் மாதிரி இருக்குமாம். இந்த வகை நாய்கள் குறிப்பாக 45 கிலோ கிராம் வரை வளருமாம். அந்த காலத்தில் இந்த நாய்களை பன்றிகளை வேடையாடுவதற்கு அதிகளவு பயன்படுத்தினார்களாம். இந்த நாய்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழுமாம். குறிப்பாக இந்த நாய்களுக்கு ஒரு மலை சிங்கத்தையே வேடையாடும் திறன் உள்ளதாம். இந்த நாய்களும் உலகின் மிக ஆபத்தான நாய்கள் பட்டியலில் ஒன்று என சொல்லலாம்.

American Pit Bull Terrier:

American Pit Bull Terrier

American Pit Bull Terrier இந்த நாய்கள் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இந்த American Pit Bull Terrier நாய்கள் மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்டது, அதேபோல் மிகவும் உயரமாக ஜம்பிங் செய்யும் திறன் இந்த நாய்களுக்கு இருக்கிறது. இந்த Pit Bull நாய்களுக்கு கடிக்கும் திறனானது மிகவும் குறைவு, அதாவது SPI அளவானது 235. இருப்பினும் இந்த அளவே Pit Bull நாய்களுக்கு போதுமான அளவு என்று கொள்ளலாம். இந்த நாய்களுடைய உடல் அமைப்பானது மிகவும் கட்டுமஸ்தாக இருக்குமாம். இந்த நாய்களும் உலகின் மிக ஆபத்தான நாய்கள் பட்டியலில் ஒன்று என சொல்லலாம்.

Rottweiler: 

rottweiler

Rottweiler நாய் மிகவும் ஆபத்தான நாய் பட்டியல்களில் ஒன்று. மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் கடிக்கும் திறன் 328 PSI வரை இருக்குமாம். இந்த நாய்களும் உலகின் மிக ஆபத்தான நாய்கள் பட்டியலில் ஒன்று என சொல்லலாம்.

நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement