பணக்காரர்களே சாப்பிட யோசிக்கும் விலை உயர்ந்த 5 உணவு பொருட்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Most Expensive Food in the World in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய சூழலில் உணவு பொருட்களின் விலை என்பது உயர்ந்து கொண்டே இருக்கின்றது. அப்படி உயர்ந்து கொண்டிருக்கும் விலையின் காரணமாக என்ன உணவு சாப்பிடுவது என்று பல சாமானிய மனிதர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் பணக்காரர்களுக்கெல்லாம் இந்த மாதிரியான குழப்பமே இருக்காது என்று சிலர் நினைப்பீர்கள். ஆனால் பணக்காரர்களே சாப்பிட யோசிக்கும் சில விலை உயர்ந்த உணவுகள் உள்ளன. ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பணக்காரர்களே சாப்பிட யோசிக்கும் விலை உயர்ந்த 5 உணவு பொருட்கள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன உணவு பொருட்கள் அதன் விலை என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 கலப்படம் உள்ள உணவுகளை கண்டறிவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா

Top 5 Most Expensive Food in the World in Tamil:

பணக்காரர்களே சாப்பிட யோசிக்கும் விலை உயர்ந்த 5 உணவு பொருட்கள் பற்றி விரிவாக காணலாம்.

1. அல்மாஸ் கேவியர் (Almas Caviar):

Expensive food in the world in tamil

நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் விலை உயர்ந்த உணவு பொருள் எதுவென்றால் அல்மாஸ் கேவியர் (Almas Caviar) தான். இது 60 முதல் 100 வயதுக்குட்பட்ட மிகவும் அரிதான அல்பினோ ஸ்டர்ஜனின் என்ற மீன் இனத்தின் பெண் மீனின் முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இதன் விலை ஒரு கிலோ $34,500 அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சத்திற்கு மேல் ஆகும்.

2. குங்குமப்பூ (Saffron):

Top 5 Most Expensive Food in the World in Tamil

நாம் இரண்டாவதாக பார்க்க இருக்கும் விலை உயர்ந்த உணவு பொருள் எதுவென்றால் குங்குமப்பூ (Saffron) தான். மத்திய கிழக்கிலிருந்து வரும் ‘சிவப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் இது உலகின் மிக விலையுயர்ந்த உணவுப்பொருட்களில் ஒன்றாகும்.

இதன் விலை கிலோ ஒன்றுக்கு $10,000 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 7 லட்சத்திற்கும் மேல் ஆகும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாக்கெட் உணவு பொருட்கள் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

3. அயாம் செமானி கருப்பு கோழி (Ayam Cemani Black Chicken):

Costly food in the world in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் விலை உயர்ந்த உணவு பொருள் எதுவென்றால் அயாம் செமானி கருப்பு கோழி (Ayam Cemani Black Chicken) தான். கருப்பு கோழி என்று அழைக்கப்படும் இது இந்தோனேசியாவில் இருந்து வந்தது.

இதன் இரத்தத்தை தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் கருப்பு நிறத்திலேயே இருக்கும். எனவே இது மிகவும் அரிதான மற்றும் விலை உயர்ந்த உணவு பொருள் ஆகும்.

இதன் விலை ஒரு ஜோடிக்கு $5000 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 3.7 லட்சம் ஆகும்.

4. வெள்ளை ட்ரஃபிள் (White Truffles):

Luxury food in the world in tamil

நாம் அடுத்து பார்க்க இருக்கும் விலை உயர்ந்த உணவு பொருள் எதுவென்றால் வெள்ளை ட்ரஃபிள்ஸ் (White Truffles) தான். இத்தாலிய ஒயிட் ட்ரஃபிள் அல்லது பீட்மாண்ட் ஒயிட் ட்ரஃபிள் என்றும் அழைக்கப்படும், இது மிகவும் பிரத்தியேகமான உணவு வகைகளில் ஒன்றாகும்.

இதன் விலை ஒரு கிலோவிற்கு சுமார் $2100 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.5 லட்சம் ஆகும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இந்த 7 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்

5. மாட்சுடேக் காளான்கள் (Matsutake Mushrooms):

Which is the most costly food in world in tamil

நமது பட்டியலில் இறுதியாக உள்ள விலை உயர்ந்த உணவு பொருள் எதுவென்றால் மாட்சுடேக் காளான்கள் (Matsutake Mushrooms) தான். ஜப்பானின் தம்பா பகுதியில் விளையும் காளான் வகைகளில் இதுவும் ஒன்று ஆகும்.

இதன் விலை ஒரு பவுண்டு (1 பவுண்டு = 1.36 கிலோ) தோராயமாக $1,000 முதல் $2,000 வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75,000 முதல் ரூ. 1.5 லட்சம் ஆகும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil