வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மோதிரம் என்பதன் வேறு சொல் 

Updated On: August 19, 2025 6:20 PM
Follow Us:
mothiram veru sol
---Advertisement---
Advertisement

மோதிரம் வேறு பெயர்கள் | Mothiram Veru Peyargal in Tamil

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொற்களுக்கும் பலவகையான அர்த்தங்களும் பலவகையான வேறு சொற்களும் இருக்கிறது. உதாரணத்திற்கு சூரியனுக்கு தினமணி, ஆதவன், ஞாயிறு, ஆதித்தன் என்று பலவகையான வேறு பெயர்கள் இருக்கிறது. அதேபோல் கடலுக்கும் ஆழி, ஆழம், அடங்காவாரிதி, அலைநீர் என்று பலவகையான வேறு பெயர்கள் இருக்கிறது. இதுபோன்று பலவகையான சொற்களுக்கு வேறு சொற்கள் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் மோதிரம் என்று சொல்லும் வார்த்தைக்கு வேறு என்னென்ன சொல் இருக்கிறது. என்பதை பற்றியும். மோதிரத்தை பற்றி சில தகவல்களும் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

மோதிரம் வேறு சொல் – Mothiram Veru Sol in Tamil:

mothitam veru sol

  1. கணையாழி
  2. விரலணி
  3. ஆழி
  4. இலச்சினை
  5. அங்குலிகம்
  6. திருவாழி
  7. மோதரம்
  8. விரற்பூண்
  9. நெளி
  10. நெளிவு
  11. விரலாழி

மோதிரம் தூய தமிழ் சொல்:

மோதிரம் என்பதற்கு தூய தமிழ் சொல் கணையாழி.

கணையாழி என்பதன் பொருள்:

கணை என்றால் விரல், ஆழி என்றால் வளையம் என்பது அர்த்தமாக இருக்கிறது.  இந்த வார்த்தையானது சங்க இலக்கியங்களிலும் அதற்கு பின் வந்த நூல்களில் இடம்பெற்றுள்ளது.

மோதிரம் பற்றி ? 

“மோதிரம்” என்ற சொல் எப்போதும் விரலில் அணியும் நகைகளைக் குறிக்கிறது, மோதிரங்கள் எப்பொழுதும் உடலின் ஒரு பகுதியை சுற்றி இறுக்கமாக பொருத்தி  இருக்கும், எனவே வளையல் போன்ற தளர்வாக அணியும் பட்டைகள் மோதிரங்கள் அல்ல.

முற்காலத்தில் மோதிர விரலுக்கு அணிவிரல் என்பதே பெயர், கணையாழி எனும் மோதிரம் அணியப்படும் விரல் என்பதால் அது ‘அணிவிரல்’ – எனப்பட்டது.

அக்காலத்தைய மன்னர்கள் தங்களுக்கென தனித்துவம் கொண்ட சிறப்பாக உருவாக்கப்பட்ட அரச இலச்சினை பொறித்த மோதிரங்களை அணிந்திருந்தனர். இவ்வகை இலச்சினை கொண்ட கணையாழியை கைச்சாத்து முத்திரையாகப் பொறித்தமையால், காலப்போக்கில் கணையாழிக்கு ‘முத்திரை’ என்ற பெயரும் உருவானது. பாண்டிய மன்னர்கள் இரண்டு மீன்கள் செங்குத்தாய் உள்ள முத்திரை மோதிரத்தை அணிந்து வந்தனர்.

மோதிரங்கள் கிமு 3 ஆம் மில்லினியம் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின்  லோதலில் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்..!
கடலுக்கு வேறு பெயர் என்ன?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now