உங்களை ஊக்குவிக்கும் பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!

Advertisement

Motivational Proverbs in English And Tamil

பொதுவாக நம் அனைவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தானாக முன்னேறுவார்கள். இன்னும் சிலர் யாரையாவது சார்ந்து தான் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் கூறும் அறிவுரையை தான் இவர்கள் பின்பற்றுவார்கள். அவர்கள் கூறும் அறிவுரையை பின்பற்றி தான் இவர்கள் முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள்.

அப்படி அறிவுரை கூறும் போது அவர்கள் சொல்வது பழமொழிகளை தான். அந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் பழமொழியிலேயே ஒருவருக்கு எல்லா விஷயத்தையும் கூறிவிடுவார்கள். அப்படி இருக்கும் பழமொழிகளை நாமும் நம் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில், இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக ஊக்குவிக்கும் பழமொழிகள் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Motivational Proverbs in English And Tamil) தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

நகைச்சுவை பழமொழிகள்

ஊக்குவிக்கும் பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்:

Motivational Proverbs in English And Tamil
தமிழ்  ஆங்கிலம் 
முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது. The rabbit wins, the tortoise wins, but the effortlessness never wins.
இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும். Your today’s pain may change as your strength tomorrow.
ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும். Bigger successes are comprised of little changes.
நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும். Hope comes with success. But success will come only to those with hope.
மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள் Learn to control your mind before it controls you
நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை. No matter how slow you do something until you stop
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான் Able one achieves it, one who cannot teach it.
மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில், Do not exclaim at the mountain’s height. If you climb the hill, even that is at your feet.
நாம் வலியைத் தழுவி, அதை நமது பயணத்திற்கு எரிபொருளாக எரிக்க வேண்டும். Your pain can be used as fuel for your journey to success.
வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள் Failures are stairs to achieve the goal of success.
ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும். A problem acts as an opportunity for you to do your best.
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஒடுங்கள். Run if you can not fly.
பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது. Old habits do not open new paths.
ஒரு மனிதன் தன்னை உலகிற்கு புத்திசாலி என்று நிரூபிப்பதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான். A man succeeds when he stops proving himself to the world.
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல. Whenever you fall, it is to rise and not to weep.
நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள். The small efforts you make today are the nail roots of success that will change tomorrow
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான். The one who takes advantage of the opportunities available and achieves the fruit of success is the best genius.

10 ஈஸியான பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement