MRI scan meaning in tamil
பொதுவாக நமது உடலுக்கு இருக்கும் பிரச்சனைகளை கண்டறிய பலவகையான ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இது போக கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி நிலையை அறிய குறிப்பிட்ட சில மாதங்கள் கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு வகையான ஸ்கேன் எழுதி தரப்படுகிறது.
மேலும் நமது உடம்பில் உள்ள உறுப்புகளில் எதாவது பிரச்சனைகள் இருக்குமா என்பதை அறிவதற்கும் பலவகையான ஸ்கேன் உள்ளது. இதனை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
அவற்றில் ஓன்று தான் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகும். இந்த MRI ஸ்கேன் என்றால் என்ன, எதற்கு இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? – MRI scan meaning in tamil
MRI (Magnetic resonance imaging) ஸ்கேன் என்பது காந்த அலைகளை கொண்டு உடலில் பல்வேறு பகுதிகளை மிக துளியாகமாக கண்டறிய எடுக்கப்படும் ஒரு வகையான நவீன ஸ்கேன் கருவி ஆகும்.
இந்த MRI ஸ்கேன் என்பது மிகவும் பாதுகாப்பானது, எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. பிறந்த குழந்தைகளுக்கு கூட இந்த ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது.
சில குறிப்பிட்ட ஸ்கேன் எடுப்பதற்கு மட்டும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உடையை மாற்றி கொள்ள வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?
ஸ்கேன் எடுப்பவர் மற்றும் அவர்களுடன் உள்ளே செல்பவர் மொபைல், கிரிட் கார்ட், டெபிட் கார்ட், சாவி, ஜிப், பல் செட்டுகள், கிளிப், ஜெயின், வாட்ச், அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட சாதனங்கள் போன்ற சாதனைகளை எடுத்து செல்ல கூடாது ஆக உங்களுடன் வைத்தவர்களின் அல்லது அங்கு அதிகவே வைத்திருக்கப்டும் லாக்கரில் வைத்துவிடுங்கள்.
பொதுவாக இந்த MRI ஸ்கேன் எடுப்பதற்கு உணவு உட்கொள்ள கூடாது என்ற எந்த ஒரு தடைகளும் இல்லை. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட ஸ்கேன் எடுப்பதற்கு மட்டும் 4 மணி நேரம் வரை உணவு உட்கொள்ள கூடாது என்று சொல்லப்படுகிறது.
இந்த ஸ்கேன் எடுப்பதற்கு முன் நர்ஸ் அல்லது டெக்னீசியர் யாராவது உங்களிடம் முன்பு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போட் குறித்த விவரங்கள் மற்றும் உங்கள் உடல் நலக் குறைகளை கேட்பார்கள்.
உங்கள் உடல்நல குறைகளை தெரிவித்தால் அவை ஸ்கேன் டாக்டருக்கு உங்கள் பிரச்சனையினை மிக துல்லியமாக மேலும் உதவியாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்கள் அல்லது கர்ப்பமாக திட்டமிட்டுள்ளவர்கள் கண்டிப்பாக முன்கூட்டியே அங்கு இருக்கும் நர்ஸிடம் தெரிவிக்க வேண்டும்.
பிறகு நர் உங்களை ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்து சென்று MRI ஸ்கேன் எடுக்கும் கருவியில் சரியாக படுக்க வைப்பார்கள். பிறகு ஸ்கேன் எடுக்க ஆரம்பிப்பார்கள்.
இந்த ஸ்கேன் எடுக்கும் போது ஏதாவது அசௌகரின்களை நீங்கள் சந்தித்தால் உடனடியாக உங்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் பந்தினை அழுத்தவும். இந்த பந்தை அழுந்தின உடனடியாக ஸ்கேன் எடுக்கப்படும் கருவியை நிறுத்திவிடுவார்கள்.
மேலும் இந்த ஸ்கேன் எடுக்கும் போது விட்டு விட்டு அல்லது தொடர்ச்சியாக ஒரு சந்தம் கேக்கும், அதனை தவிர்க்க உங்கள் காதுகளை பஞ்சினை வைத்து அடைப்பார்கள்.
மேலும் நீங்கள் அந்த கருவியில் சரியாக படுத்தால் ஸ்கேன் எடுக்க ஆரம்பிப்பார்கள் பிறகு அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை மருத்துவர் பார்ப்பார். பிறகு தேவைப்பட்டால் மீண்டும் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள் ஆக இதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
பிறகு இந்த ஸ்கேன் குறித்த விவரங்களை மருத்துவர் சரி பார்ப்பார், தேவைப்பட்டால் மருத்துவர் ஸ்கிரீனிங் ஸ்கேன் எடுப்பார் அதுவரை காத்திருக்க வேண்டும். அதற்கு 10 இருந்து 15 நிமிடங்கள் ஆகும்.
அதன் பிறகு தேவைப்பட்டாலோ, மருத்துவர் பரிந்துரைத்திருந்தாலோ கையில் வென்பிளாட் ஊசி வழியாக கான்ட்ராஸ்ட் மருந்து செலுத்திய மீண்டும் ஸ்கேன் எடுக்கப்படும். இதுவே contrast scan ஆகும்.
உங்களுக்கு contrast scan எடுக்கப்பட்டது என்றால் அன்றைய தினம் நீங்கள் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இசிஜி மற்றும் எக்கோ டெஸ்ட் என்றால் என்ன?
உங்களுக்கு பின்வருபவை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்:
- Metallic Heart Valves
- Neurostimulators
- Matal Fragments in Body
- Pregnancy
- Aneurysm Clips in Head
- Cardiac Pacemaker
- Dental Fillings/ Fixtures
- Inner Ear Implants
- Internal Filation Pins & Plates
- Artifical Joints
மேலும் இது போன்ற தகவல்களை பெற நமது பொதுநலம்.காம் இணையதளத்தை பார்வையிடுங்கள்👉👉👉 | www.pothunalam.com |