முஹுரத் வர்த்தகம்
முகூர்த்தம் பார்ப்பது இந்துக்களின் பண்பாடுகளில் ஒன்று. அந்த முகூர்த்தம் நமது வளர்ச்சிக்கு துணைபுரியும் என்பது நம்பிக்கை. முகூர்த்தம் பார்த்து சுப நிகழ்ச்சிகள் செய்வார்கள் முதலீடுகளை செய்வார்கள். அவ்வாறு செய்யும் போது நேர்மறையான பலன்களை தரும். அந்த வகையில் இந்திய பங்குச் சந்தையிலும் முகூர்த்த நேரத்தில் முதலீடு செய்வதால் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்பது நம்பிக்கை. ஆனால் தீபாவளி என்பது தேசிய விடுமுறை தினம் என்பதால் அன்று மாலை ஒரு மணி நேரம் மட்டும் பங்குகள் வாங்க அமைக்கப்பட்டதுதான் முஹுரத் வர்த்தகம் என்பது. அப்படி அந்த முஹுரத் வர்த்தகத்தின் சிறப்பு என்ன என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Muhurat Trading in tamil:
முஹுரத் வர்த்தகம் என்பது தீபாவளி அன்று இந்திய பங்குச் சந்தையில் நடைபெறும் ஒரு சிறப்பு வகையான வர்த்தகம் ஆகும்.
முஹுரத் வர்த்தக நேரத்தில், அதாவது தீபாவளி அன்று பங்குச் சந்தைகள் வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக, மாலை 6 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.
இந்த முஹுரத் வர்த்தக நேரத்தில் பங்குகளை வாங்குவது லாபத்தை தரும் என்பது மக்களின் நம்பிக்கை.
முஹுரத் வர்த்தக பங்கு சந்தையில் புதிய ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.
முஹுரத் வர்த்தக நேரம் 2023:
அதாவது இந்த வருடம் முஹுரத் வர்த்தக நேரத்தை BSE மற்றும் NSE அறிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் 7.15 வரை சிறப்பு முஹுரத் வர்த்தக நடைபெறும் என்றும்.
அதில் 15 நிமிடங்கள் சந்தையின் முந்தைய அமர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
முஹுரத் வர்த்தகத்தின் போது பங்குச் சந்தைகள் பொதுவாக ஏற்றம் காணப்படும். கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி அன்று சென்செக்ஸ் சராசரியாக 1. 5% உயர்ந்துள்ளது. 10 வருடங்களில் 7 வருடங்கள் நேர்மறையான வருவாயை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதனால் இந்த வருடம் முஹுரத் வர்த்தகத்தை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி காத்துத்துள்ளனர்.
முஹுரத் வர்த்தகத்தின் நன்மைகள்:
இது முதலீட்டாளர்களுக்கு தீபாவளி போன்ற நான்நாளில் பங்குகளை வாங்க வாய்ப்பு அளிக்கிறது..
இது முதலீட்டாளர்களுக்கு சந்தையில் ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் வாய்ப்பளிக்கிறது.
இது முதலீட்டாளர்களுக்கு தங்கள் போர்ட்ஃபோலியோவில் புதிய பங்குகளை சேர்க்க வாய்ப்பளிக்கிறது.
முஹுரத் வர்த்தகத்தின் அபாயங்கள் :
இது ஒரு குறுகிய கால வர்த்தக காலம் என்பதால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படு வாய்ப்பு உள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |