நாளையுடன் தனது சேவைகளை நிறுத்தும் கருப்பு மஞ்சள் நிறமுடைய காளி-பீலி டாக்ஸி.

Advertisement

காளி-பீலிஸ் டாக்சி

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த பொருளின் மீதான நமது தாக்கம் கலாச்சார தொடர்பு நம்மை அதில் இருந்து மீள நாட்கள் எடுக்கும். அந்த பொருளின் பரிமாணங்கள் மாறினாலும் அதன் மேல் உள்ள மதிப்பு மாறாது. அப்படி ஒரு சின்னமாக இருப்பது கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட டாக்சி. என்னதான் இப்போது பல வகை டாக்சிகள் வந்தாலும், நமக்கு டாக்சி என்றால் ஞாபத்திற்கு வருவது கருப்பு மஞ்சள் டாக்சியாக தான் இருக்கும். மும்பையின் சின்னமாக இருந்த இந்த டாக்சி தனது கடைசி கட்டத்தில் உள்ளது. என் இந்த திடீர் செயல் என்று பலரும் எண்ணுகின்றனர். வாருங்கள் அதற்கான காரணம் என்ன?  காளி-பீலிஸ் டாக்சியின் வரலாறு என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காளி-பீலிஸ் டாக்சி:

மும்பையின் சின்னமான பிரீமியர் பத்மினி கருப்பு-மஞ்சள் டாக்சிகள் நாளையுடன் தனது சேவைகளை முடித்துக்கொள்கிறது.

காளி-பீலிஸ் டாக்சியின் வரலாறு ?

ஆண்டு 1964. மும்பையில் Premier Automobiles Limited ஒரு புதிய காரை இத்தாலியின் Fiat உரிமத்தின் கீழ் அறிமுகப்படுத்தியது. பின்னாளில் அது மும்பை டாக்சிகளுக்கான சரியான தேர்வாக அமைந்தது.

6 தசாப்தங்களுக்குப் பிறகு, இப்போது, அதாவது அக்டோபர் 31 2023, முதல் மும்பை-யின் ஒரு நினைவாகவும் கலாச்சார குறியீடாகவும் இருந்த காளி-பீலிஸ் என்னும் கருப்பு மஞ்சள் நிற டாக்சி நாளையுடன் தனது சேவைகளை முடிவுக்கு கொண்டுவருகிறது.

காளி-பீலிஸ்-ன் கடைசி டாக்சி:

காளி-பீலிஸ் மும்பையின் பெருமை மற்றும் என்னுடைய வாழ்க்கை என்று கூறும் அப்துல் கரீம் கர்சேகர், MH-01-JA-2556 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மும்பையின் கடைசியாக பதிவுசெய்யப்பட்ட காளி-பீலிஸ் டாக்ஸியை வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசு, டாக்சிகளுக்கான வயது வரம்பு 20 ஆண்டுகளாக நிர்ணயித்தது.

அதாவது அதிகம் மாசுகளை வெளிப்படுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைக்க இந்த திட்டத்தினை மகாராஷ்டிரா அரசு வெளியிட்டது. அதன் படி 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி பதிவு செய்த கடைசி டாக்ஸியான காளி-பீலிஸ் 20 வருடங்கள் கடந்த நிலையில் நாளையுடன் தனது சேவையை முடித்துகொள்கிறது.

இந்த நடவடிக்கையின் விளைவாக மும்பையுன் ஐகானாக விளங்கிய இரண்டு  அடுக்கு பேருந்து முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து காளி-பீலிஸ் டாக்ஸிகள் சேவை முடிகிறது.

காளி-பீலிஸ் டாக்சி சகாப்தம்:

1964-ம் ஆண்டு ‘ஃபியட்-1100 டிலைட்’ மாடலுடன், Streering பொருத்தப்பட்ட gear shifter உடன் கூடிய சக்திவாய்ந்த 1100 சிசி கார் மூலம் பிரீமியர் பத்மினியின் டாக்ஸி தனது பயணத்தை தொடக்கியுள்ளது.

அந்த கால கட்டத்தில் இருந்த plymouth, Landmaster மற்றும் Dodge போன்ற டாக்ஸி களுடன் ஒப்பிடும் போது இதன் அளவு சிறியதாக இருந்துள்ளது.

இந்த டாக்ஸி அறிமுகப்படுத்திய குறைந்த நாட்களில் இது சாலைகளில் அதிக அளவில் இருந்தது.

காருக்கு பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, 1970-ல், மாடல் பிரீமியர் பிரசிடெண்ட் என்றும் பின்னர் பிரீமியர் பத்மினி என்றும் மாற்றப்பட்டது.

14 ஆம் நூற்றாண்டின் மேவார் நாட்டு இளவரசியின் பெயர் பத்மினி ஆகும்.

பேசும் போது தடுமாறுகிறதா, பேசவந்த வார்த்தைகள் மறக்கின்றதா இதற்கு காரணம் என்ன !

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement