முஸ்லிம் பண்டிகைகள் 2025 | Muslim Festivals List Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முஸ்லிம் பண்டிகை நாட்கள் 2025 (List of Muslim Festivals in India) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக பண்டிகைகள் என்பது, அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள் ஆகும். ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்றவாறு பண்டிகைகள் அமைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தை எடுத்துக்கொண்டால் பல்வேறு பண்டிகைகள் உள்ளது. அதேபோல் முஸ்லீம் பண்டிகைகள் மற்றும் கிருஸ்த்துவ பண்டிகைகளும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களின் கிழமை வேறுபடும். ஆகையால், இந்த ஆண்டு 2025 முஸ்லீம் பண்டிகைகளில் எந்த பண்டிகை எப்போது வருகிறது என்பதை கொடுத்துள்ளோம்.
List of Muslim Festivals 2025:
List of Muslim Festivals Dates in India 2025:
விடுமுறை நாள் | தேதி & கிழமை |
லைலத் அல் மிராஜ் (Lailat al Miraj) | ஜனவரி 27 (திங்கட்கிழமை) |
லைலத் அல் பரா’ஆ (Lailat al Bara’ah) | பிப்ரவரி 14 (வெள்ளி) |
ரமலான் (Ramadan) | பிப்ரவரி 28 (வெள்ளி) |
லைலத் அல் காதர் (Laylat al Qadr) | மார்ச் 27 (வியாழக்கிழமை) |
ஈத்-அல்-ஃபித்ர் (ரமலான் முடிவு) ((Eid -al- Fitr (End of Ramadan)) | மார்ச் 31 (திங்கட்கிழமை) |
வக்ஃபுல் அரஃபா – ஹஜ் (Waqf al Arafa – Hajj) | ஜூன் 06 (வெள்ளி) |
ஈத்-அல்-அதா (Eid -al- Adha) | ஜூன் 07 (சனிக்கிழமை) |
ஹிஜ்ரா – இஸ்லாமிய புத்தாண்டு (Hijra – Islamic New Year) | ஜூன் 26 (வியாழக்கிழமை) |
ஆஷுரா / முஹர்ரம் நாள் (Day of Ashura / Muharram) | ஜூலை 05 (சனிக்கிழமை) |
மிலாது உன் நபி (Milad un nabi) | செப்டம்பர் 05 (வெள்ளி) |
இந்த பண்டிகைகள் பற்றிய சில விவரங்களை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்க்கலாம்.
லைலத் அல் மிராஜ் (Lailat al Miraj):
லைலத் அல் மிராஜ் பண்டிகை ஆனது, ரஜப் மாதத்தின் 27 வது நாளில் கொண்டாடப்படுகிறது. முகமது நபி மெக்காவிலிருந்து ஜெருசலேம் பயணம் செய்து சொர்க்கத்திற்கு ஏறியதை நினைவுபடுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நாளை, முஸ்லிம்கள் பிரார்த்தனைகள், குர்ஆன் ஓதுதல் மற்றும் முகமது நபி அவர்களின் ஆன்மீக போதனைகளை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறார்கள்.
லைலத் அல் பரா’ஆ (Lailat al Bara’ah):
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ஷாபான் மாதத்தின் 15வது நாளில் லைலத் அல் பரா’ஆ கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் இந்த நாளை பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல் மற்றும் தியானம் செய்து கொண்டாடுகிறார்கள். மேலும், சிலர் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய கல்லறைகளுக்குச் செல்கிறார்கள்.
ரமலான் (Ramadan):
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் அனைத்து முஸ்லிம்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது நோன்பு, பிரார்த்தனை மற்றும் பிரதிபலிப்புக்கான காலம் ஆகும். கடவுளுடனான பிணைப்பை வலுப்படுத்துதல், ஆன்மீக சிந்தனையில் ஈடுபடுதல் மற்றும் தேவைப்படுபவர்களிடம் கருணை காட்டுதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
லைலத் அல் காதர் (Laylat al Qadr):
ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றில் லைலத்துல் கத்ர் கொண்டாடப்படுகிறது. இந்த இரவு ஆனது, நபிகள் நாயகத்திற்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட இரவு என்று கூறப்படுகிறது. முஸ்லிம்கள் இந்த இரவை தொழுகை செய்தும், குர்ஆனை ஓதியும், மன்னிப்பு தேடியும் கொண்டாடுகிறார்கள்.
ஈத்-அல்-ஃபித்ர் (ரமலான் முடிவு):
ஈத்-அல்-ஃபித்ர் ஆனது, நோன்பு திறக்கும் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் முடிந்த உடனேயே ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ஈத்-அல்-ஃபித்ர் கொண்டாடப்படுகிறது. இது, உடல் மீது ஆன்மாவின் வெற்றியையும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் குறிக்கிறது. இந்நாளில், முஸ்லிம்கள் மசூதிகளில் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள்.
வக்ஃபுல் அரஃபா – ஹஜ் (Waqf al Arafa – Hajj):
வக்ஃபுல் அரஃபா – ஹஜ் ஆனது, ஹஜ் யாத்திரையின் போது துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பதாம் நாளில் அனுசரிக்கப்படுகிறது. இது அரஃபா தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில், யாத்ரீகர்கள் அரஃபா சமவெளியில் பிரார்த்தனை செய்யவும், பாவங்களை ஒப்புக்கொள்ளவும், அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவும் கூடுகிறார்கள்.
ஈத்-அல்-அதா (Eid -al- Adha):
ஈத்-அல்-அதா ஆனது, தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்-ஹிஜ்ஜாவின் பத்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஆனது, கடவுளின் கட்டளைப்படி ஆபிரகாம் தனது மகன் இஸ்மாயிலை பலியிடத் துணிந்ததை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை நான்கு நாட்கள் கடைபிடிக்கிறார்கள்.
ஹிஜ்ரா – இஸ்லாமிய புத்தாண்டு (Hijra – Islamic New Year):
இஸ்லாமிய புத்தாண்டு இஸ்லாமிய மாதமான முஹர்ரத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து ஹிஜ்ரா என்று அழைக்கப்படும் மதீனாவிற்கு இடம்பெயர்ந்ததை நினைவு படுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் இந்த நேரத்தை தங்கள் நம்பிக்கை மற்றும் வரலாற்றைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும், சிந்திப்பதற்கும் செலவிடுகிறார்கள்.
ஆஷுரா / முஹர்ரம் நாள் (Day of Ashura / Muharram):
இஸ்லாமிய மாதமான முஹர்ரம் பத்தாம் நாளில் ஆஷுரா கொண்டாடப்படுகிறது. கர்பலா போரில் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் இப்னு அலியின் தியாகம் உட்பட இஸ்லாமிய வரலாற்றிலிருந்து நிகழ்வுகளை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. இது முஸ்லிம்களுக்கு ஒரு சிந்தனை மற்றும் துக்க நாளாக கருதப்படுகிறது.
மிலாது உன் நபி (Milad un nabi):
இஸ்லாமிய மாதமான ரபி’ அல்-அவ்வலின் பன்னிரண்டாவது நாளில் மவ்லித் அல்-நபி கொண்டாடப்படுகிறது. இது நபிகள் நாயகத்தின் பிறப்பை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. முகமதுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி தெரிந்துகொண்டு, பிரார்த்தனைகள், குர்ஆன் ஓதுதல் மற்றும் குடும்பத்தினருடனும், ஏழைகளுடனும் உணவைப் பகிர்ந்து கொண்டு இந்நாளை கொண்டாடுகிறார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |