முதுமொழிக்காஞ்சி வேறு பெயர் | Muthumoli Kanchi Veru Peyargal
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் முதுமொழிக்காஞ்சி பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். நம் தமிழில் ஏராளமான நூல்களை படித்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த முதுமொழிக்காஞ்சியாகும். முதுமொழிக்காஞ்சியானது துறையை சேர்ந்த பாடல்களை கொண்டவையாகும். இதில் வரும் பாடல்கள் மக்களுக்கு அறிவுநெறிகளையும், உணவுகளின் தேவைகளையும், வாழ்க்கையின் முக்கியத்துவங்களையும் பற்றித்தான் இந்த முதுமொழிக்காஞ்சியில் கூறப்படுகிறது. மேலும் முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர், அவற்றின் வேறு பெயர்கள் மற்றும் முதுமொழிக்காஞ்சியின் சிறப்புகளை பற்றி நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..
முதுமொழிக்காஞ்சியை மதுரை கூடலூர் கிழார் என்பவர் இயற்றினார். இது ‘மூதுரை, முதுசொல்’ என்னும் பொருள் தரக்கூடியது . இந்நூல் சங்கம்மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் இயற்றப்பட்டது. இதில் 100 பாடல்கள் உள்ளது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தனிப்பெயரும் உள்ளது. அதாவது, சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து,எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து இப்படி பத்து பெயர்களும் உள்ளது.
ஏலாதி பாடலின் நூல் குறிப்பு |
முதுமொழிக்காஞ்சி துறை என்றால் என்ன?
முதுமொழிக்காஞ்சி என்னும் துறையை சேர்ந்த பாடல்கள் புறநானூற்றில் நான்கு பாடல்களை கொண்டுள்ளது. இந்த துறையானது புறநானூற்றில் புறத்திணையில் ஒன்றான பொதுவியல் என்னும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முதுமொழிக்காஞ்சியானது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இவை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியதை பாடலின் மூலம் பத்து பத்தாக அடுக்கி கூறுகின்றது.
முதுமொழிக்காஞ்சியின் பெயர் காரணம்:
முதுமொழிக்காஞ்சியில் முதுமொழி என்பது மூத்தோர் சொல் என்றும் காஞ்சி என்பது மகளிர் இடையணி என்றும் மூத்தோர் சொற்கள் பலவற்றை கோர்த்த கோவை முதுமொழி காஞ்சி என்று கூறப்படுகிறது.
முதுமொழிக்காஞ்சி என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்:
முதுமொழிகாஞ்சியின் வேறுபெயர்கள் ஆனவை,
- அறவுரைக்கோவை
- ஆத்திச்சூடியின் முன்னோடி
முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர்:
இந்த முதுமொழிக்காஞ்சி துறை பாடலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார் ஆவார். இவரது ஊர் கூடலூர், இவர் சங்ககாலத்தில் வாழ்ந்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்றும் சங்ககாலத்தில் பிற்பட்டவர் என்றும் இருவரும் வெவ்வேறானவர் என்று உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிட்டுள்ளார்.
முதுமொழிக்காஞ்சி பாடல்கள்:
முதுமொழிக்காஞ்சியில் பத்து பதிகங்களை கொண்டுள்ளது. அதாவது பத்து பதிகங்களில் 100 பாடல்கள் உள்ளது. முதுமொழிக்காஞ்சியில் உள்ள ஒவ்வொரு பத்து பாடல்களும் “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது. இந்த பாடல்கள் ஆனது குறள்வெண் செந்துறை என்ற யாப்பால் ஆனவையாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல் என்று அழைக்கப்படும் இவை தமிழ் நூல் தொகுதிகளில் சிறியவை ஆகும். இவற்றில் பத்து அடிகளை கொண்ட ஒவ்வொரு பாடல்களிலும் பத்து தனிப்பெயர்களையும் கொண்டுள்ளது. அவற்றின் பத்து பெயர்கள்,
- சிறந்த பத்து
- அறிவுப் பத்து
- பழியாப் பத்து
- துவ்வாப் பத்து
- அல்ல பத்து
- இல்லைப் பத்து
- பொய்ப் பத்து
- எளிய பத்து
- நல்கூர்ந்த பத்து
- தண்டாப் பத்து
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |