ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்கள்

Advertisement

Rabindranath Tagore Books Name in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்கள் (Name of The Books Written by Rabindranath Tagore in Tamil) பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ரவீந்திரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன” என்ற பாடலை இயற்றியவரும் இவரே ஆவார். அட்ஜெபோல், இவர் இயற்றிய அமர் சோனார் பங்களா பாடல் வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி Rabindranath Tagore அவர்கள் பல சிறப்பு வாய்ந்த நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் என அனைத்தும் புகழ்பெற்று உள்ளது.

ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், மே மாதம் 7-ம் தேதி 1861-ம் ஆண்டு தேவேந்திரநாத் தாகூர்,  சாரதா தேவிக்கு மகனாக பிறந்தார். இவர் இளம் வயதிலேயே கவிதை உணர்வு உள்ளிட்ட பலவற்றில் அதிகம் நாட்டம் கொண்டு இருந்தார். இதன் காரணமாக பல்வேறு பாடல்கள், கவிதைகள் மற்றும் நூல்கள் போன்றவற்றை இயற்றியுள்ளார்.

ரவீந்திரநாத் தாகூர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்கள்:

  • கீதாஞ்சலி 
  • இளவேனிலின் புது வரவு
  • தாகூரின் மின்மினிகள்
  • ஜீவன்-கதா
  • ஜீவன்-ஸ்மிருதி
  • ஆத்மா-பரிசே
  • கோரா
  • காரே பைரே

மேலே கூறியுள்ள நூல்கள் அனைத்தும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய முக்கியமான மற்றும் பிரபலமான நூல்கள் ஆகும்.

கீதாஞ்சலி :

கீதாஞ்சலி என்பது  ரவீந்திரநாத் தாகூரின் பிரபலமான கவிதைத் தொகுப்பு ஆகும். இந்நூலிற்காக ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவர்.

இளவேனிலின் புது வரவு:

ரவீந்திரநாத் தாகூர் இளவேனிலின் புது வரவு என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் குழந்தைகள் பற்றிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு ஆகும்.

தாகூரின் மின்மினிகள்:

தாகூரின் மின்மினிகள்  நூல் ஆனது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு ஆகும்.

ஜீவன்-கதா:

ஜீவன்-கதா என்பது தாகூரின் சுயசரிதை நூல் ஆகும்.

ஜீவன்-ஸ்மிருதி:

ஜீவன்-கதா போன்று ஜீவன்-ஸ்மிருதி என்பது தாகூரின் மற்றொரு சுயசரிதை நூல் ஆகும்.

ஆத்மா-பரிசே (Atma Parichay):

ஆத்மா-பரிசே என்பது தாகூரின் தத்துவ நூல் ஆகும்.

ரவீந்திரநாத் தாகூர் கல்வி சிந்தனைகள்

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement