நன்றி மறப்பது நன்றன்று திருக்குறள் அதிகாரம்..!

Nandri Marappathu Thirukkural Meaning in Tamil

Nandri Marappathu Thirukkural Meaning in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..  இன்றைய பதிவில் திருக்குறளில் உள்ள ஒரு குரலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். திருக்குறள் பொதுவாக உலக பொதுமறைநூல் ஆகும். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். ஆம் மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நூல் திருக்குறள் என்று சொல்லலாம். திருக்குறளில் மொத்தம் திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது. திருக்குறளை மொத்தம் 9,310 சீர்கள் அல்லது 14,000 சொற்களைக் கொண்டு வள்ளுவர் பாடியுள்ளார். திருக்குறளில் மொத்தல் 42,194 எழுத்துக்கள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சரி இந்த பதிவில் நன்றி மறப்பது நன்றன்று திருக்குறளில் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நன்றி மறப்பது நன்றன்று திருக்குறள் அதிகாரம்..!

  • குறள் எண் – 108
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – இல்லறவியல்
  • அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

விளக்கம்: 

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது

— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

— மு. வரதராசன்

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

— சாலமன் பாப்பையா

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

— மு. கருணாநிதி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருக்குறள் அதிகாரங்கள் pdf

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil