நான்மணிமாலை பற்றிய குறிப்புகள்
இன்றைய பதிவில் நான்மணிமாலை சொற்றோடர் பற்றி பார்க்க போகிறோம். நான்மணிமாலை என்பது வெண்பா, கலித்துறை,ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் ஆகியா நான்கு வகை பாக்களும் மாறி மாறி மாலையாக கோர்க்கப்பட்டு நாட்பது செய்யுள்களால் அமைந்த சிற்றிலக்கிய வகையை குறிக்கிறது. நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு சிறப்புகளையும், ஒவ்வொரு கருத்துக்களையும் பெற்றுள்ளன. இப்பொழுது நாம் நான்மணிமாலை என்றால் என்ன? நான்மணிமாலையின் சிறப்புகளை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நான்மணிமாலை என்றால் என்ன?
நான்மணிமாலை என்பது தமிழில் உள்ள 90 பிரபந்த வகைகளில் ஒன்று. இது நான்கு வகையான மணிகளை போல நான்கு வகை பாக்களையும் கொண்டுள்ளது. நான்மணிமாலை என்பது வெண்பா, கலித்துறை,ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் ஆகியா நான்கு வகை பாக்களும் மாறி மாறி மாலையாக கோர்க்கப்பட்டு நாட்பது செய்யுள்களால் அமைந்த சிற்றிலக்கிய வகையை குறிக்கிறது. நான்மணிமாலை பொதுவாக நாற்பது செய்யுள்களை கொண்டுள்ளது. வெண்பா பாடல்கள் சம்பந்தர் பற்றியும், கலித்துறை பாடல் திருநாவுக்கரசர் பற்றியும் விருத்தப்பாக்கள் சுந்தரர் பற்றியும் அகவற்பாக்கள் மாணிக்கவாசகர் பற்றியும் கூறுகின்றன. இந்த நூலுக்கு குட்டி பெரிய புராணம் என்ற மற்றோரு பெயரும் உண்டு.
நான்மணிமாலை தோன்றிய காலம்:
நான்மணிமாலை என்ற இலக்கிய வகை 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. நான்மணிமாலை என்பது ஒருவகை பிரபந்தம் ஆகும்.
நான்மணிமாலை எண்ணிக்கை:
நான்மணிமாலை மொத்தம் 40 செய்யுள்களை உள்ளடக்கியது. இதில் முக்கிய நூல்களான திருவாரூர் நான்மணிமாலை, கோயில் நான்மணிமாலை, நால்வர் நான்மணிமாலை போன்ற முக்கிய நான்மணிமாலை நூலாகும்.
நான்மணிமாலை சிறப்புகள்:
நான்மணிமாலை அமைந்த 40 வகை செய்யுள்களுக்கும் தனித்தனி பெயர் கிடையாது. இதற்கு மாறாக நான்கு வகையான பாக்களால் அமைந்த 40 பாடல்களின் தொகுப்பையே நான்மணிமாலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான சிற்றிலக்கிய நூல் ஆகும்.
நால்வர் நான்மணிமாலை :
சிவப்பிரகாசர் எழுதிய இந்த நூலில் ஒவ்வொரு பத்து பாடல்களும் வெவ்வேறு வெவ்வேறு சமைய குறவர்களான திருஞானசம்பந்தர், திருப்பிநாவுக்கரசர் , சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோரின் புகழை வழங்குகிறது.
கோயில் நான்மணிமாலை :
கோயில் நான்மணிமாலை பட்டினத்தார் பாடிய இந்த நூல் சிதம்பரத்தில் உள்ள நடராச பெருமானின் புகழை போற்றுகிறது.
திருவாரூர் நான்மணிமாலை :
திருவாரூர் நான்மணிமாலை குமரகுருபரர் திருவாரூர் தியாகேச பெருமானின் புகழை போற்றி பாடிய நூல் ஆகும்.
விநாயகர் நான்மணிமாலை :
விநாயகர் நான்மணிமாலை மகாகவி சுப்பிரமணி பாரதியார் விநாயகப் பெருமானை போற்றி பாடிய நூலாகும்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |













