வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நட்சத்திரம் சொல்லும் பழமொழிகள்

Updated On: August 10, 2026 5:59 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

நட்சத்திர பழமொழிகள் 

இன்றைய பதிவில் நட்சத்திர பழமொழிகளை பற்றி பார்க்க போகிறோம். பழமொழி என்பது நம் முன்னோர்கள் நாம் செய்யும் செயல்களை வைத்து ஓர் இரு வரிகளில் புரிய வைக்கும் வகையில் பழமொழிகளை சொல்லிவைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதில் சில பழமொழி சிரிக்க வைக்கும் வகையிலும், சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். மேலும், நட்சத்திர பழமொழி என்பது தமிழ் கலாச்சாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தொடர்புடையவை ஆகும். இவ்வகை பழமொழிகள் அந்ததந்த நட்சத்திரத்தின் தன்மையும் அதன் சிறப்பையும் சில நேரத்தில் அதன் எதிர்மறையான அம்சங்களையும் பற்றி கூறுகிறது. இன்று இந்த பதிவில் பழமொழிகள் மற்றும் இப்போது இருக்கும் புதிய பழமொழிகளையும் பற்றி படித்து தெரிந்துகொள்வோம்.

நட்சத்திர தமிழ் பழமொழிகள்:

நட்சத்திரம்  பழமொழிகள் 
பரணி  பரணி மழை தரணியெல்லாம் பொழியும் 
மகம்  மகத்து பிள்ளை ஜெகத்திலே கிடையாது 
உத்திரம்  உத்திரத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு காணியும் 
அஸ்தம்  அஸ்தம் நட்சத்திரத்தில் ஒரு சேயும் ஆற்றோரத்தில் நிலமும்
சித்திரை  சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் 
கேட்டை  கேட்டையில் பிறந்தவன் கோட்டை கட்டி ஆள்வான் 
மூலம்  மூலத்தில் பிறந்தவன் காலத்தில் வாழ்வான் 
பூராடம் 

பூராட காரனோடு போராட முடியாது 

திருவோணம்  திருவோணத்திற்கு எதிர் ஓணம் இல்லை 
அவிட்டம்  அவிட்டத்தில் பெண் பிறந்தால் தவிட்டு பானையிலும் பொன்.
சதயம்  சதயத்திற்கு சுய புத்தியும் கிடையாது ,சொல் புத்தியும் கிடையாது
விசாகம்  விசாகபக்தி  வேந்தனை வெல்லும்  
பூரட்டாதி  பூர்வ புண்ணியம் இருந்தால் பூரட்டாதியில் பிறப்பான் 
உத்திராடம்  உத்திராட்டத்தில் ஒரு பிள்ளையும் ஊர் வாரியம் ஒரு நிலமும் 

 

20 பழமொழிகள் | 20 Palamoli in Tamil

Easy Natchathira palamolikal:

1. அஸ்வினி -அஷ்வினி பிள்ளை அப்பனுக்கு ஆகாது 

2. பரணி -பரணி தரணி ஆளும் 

3. ரோகிணி- ரோகிணி எட்டாவது ஆண்பிள்ளை , தாய் மாமனுக்கு பகை 

4. மிருகசீரிடம்- மிருகசீரிஷம் பட்டாபிஷேகம் 

5. திருவாதிரை – திருவாதிரை போனால் பொருள் திரும்பும் 

6. புனர்பூசம் -புனர்பூசம் புத்தக பிரியன் 

7. பூசம் -பூசம் பொன் தேடும்  

8. உத்திரம்- உத்திரத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு காணியும் 

9. சித்திரை -சித்திரை பத்தரை மாற்று தங்கம் 

10. சுவாதி – சுவாதி நட்சத்திரத்தின் முத்து 

11. அனுஷம் – அனுஷத்தில் ஆயுதம் பயில் 

12. விசாகம்- விசாகம் வீரியம் பேசும்  

13. கேட்டை – கேட்டை ஏட்டனுக்கு ஆகாது 

14. மூலம் -ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் 

15. பூராடம் – பூராட்டகாரனோடு சண்டை போடாதே 

16.உத்திராடம்- உத்திரத்தில் ஒரு பிள்ளை,உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை 

17. திருவோணம் -திருவோணம் மைத்துளர்க்கினியான் 

18. அவிட்டம் -அவிட்டம் தொட்டதெல்லாம் பொன் 

19 .சதயம் -சதயம்  சாதனை செய்யும் 

20. பூரட்டாதி – பூர்வ புண்ணியம் இருந்தால் பூரட்டாதியில் பிறப்பான் 

21. உத்திரட்டாதி- உத்திரட்டாதி ஊர் திரிவான்  

22. ரேவதி -ரேவதி பிள்ளை இரையை பிடிக்கும் 

23. ஹஸ்தம் -ஹஸ்தம் கை வைத்த இடம் பஸ்பம் 

24. ஆயில்யம்- ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now