நாட்டு காய்கறிகள் பெயர்கள் | Nattu Kaikarigal in Tamil

நாட்டு காய்கறிகள் பெயர்கள் | Nattu Kaikarigal Vagaigal List

நண்பர்களே வணக்கம் இன்று நாம் பார்க்கப்போவது என்னவென்றால் நாட்டு காய்கறிகள் வகைகள் பற்றி தான். பொதுவாக சில காய்கறிகளுக்கு நிறைய வகைகள் உள்ளது. அதனை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக சிறு குழந்தைகளுக்கு காய்கறிகள் பெயர்களை சொல்லி கொடுப்பார்கள். சில காய்கறிகளை அதிகம் பேர் பாத்திருக்க வாய்ப்பில்லை அந்த வகையில் இது போன்ற காய்கறிகள் உள்ளதா..? என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

காய்கறிகள் பெயர்கள்

நாட்டு காய்கறி:

நாட்டு காய்கறி என்றால் முதலில் சொல்வது வெண்டைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவற்றை சொல்வார்கள் ஆனால் இந்த காய்கறிகளில் எத்தனை வகைகள் உள்ளது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

வெண்டைக்காய் வகைகள்:

 • வெண்டைக்காய்
 • சிவப்பு வெண்டை
 • பருமன் வெண்டை
 • பல கிளை சிவப்பு வெண்டை
 • மலை வெண்டை
 • யானை தந்த வெண்டை
 • பச்சை பல கிளை வெண்டை
 • காபி வெண்டை
 • துறையூர் வெண்டை
 • விருதுநகர் சுனை வெண்டை
 • கஸ்தூரி வெண்டை

அவரைக்காய் வகைகள்:

 • கோழி அவரை ஊதா
 • ஊதா ஓர கொம்பு அவரை
 • பச்சை பட்டை அவரை
 • மூக்குத்தி அவரை
 • சிறகு அவரை
 • தம்பட்டை அவரை (செடி,கொடி)
 • வாள் அவரை
 • ஊதா அவரை
 • ஊதா ஓர பட்டை அவரை
 • இலாட அவரை
 • பட்டாணி அவரை
 • யானை காது காது அவரை
 • செடி அவரை
 • பூனைக்காலி அவரை
 • மொச்சை அவரை

கத்தரிக்காய் வகைகள்:

 • கொட்டாம்பட்டி கத்தரிக்காய்
 • வெள்ளை கத்தரிக்காய்
 • ஊதா கத்தரிக்காய்
 • வேலூர் முள் கத்தரிக்காய்
 • தொப்பி கத்தரிக்காய் பச்சை
 • திருப்பூர் கத்தரிக்காய்
 • மணப்பாறை ஊதா கத்தரி
 • கண்டங்கத்திரி
 • பவானி கத்தரிக்காய்
 • புழுதி கத்தரிக்காய்
 • குலசை கத்தரிக்காய்
 • வழுதுணை கத்திரிக்காய்

பீர்க்கங்காய் வகைகள்:

 • குட்டை பீர்க்கன்
 • நுரை பீர்க்கன் (வெள்ளை)
 • நுரை பீர்க்கன் (கருப்பு)
 • சித்திரை பீர்க்கன்
 • குண்டு பீர்க்கன்
 • குட்டி குண்டு நுரை பீர்க்கன்
 • ஆந்திரா குட்டி பீர்க்கன்
 • உறுதி பீர்க்கன்

சுரைக்காய் வகைகள்:

 • சட்டி சுரைக்காய்
 • நீட்டு சுரைக்காய்
 • கும்ப சுரைக்காய்
 • குடுவை சுரைக்காய்
 • வரி சுரைக்காய்
 • நாமக்கல் கரும் பச்சை சுரை
 • நீச்சல் சுரை
 • 5 அடி சுரை
 • ஆட்டுக்கால் சுரை
 • வாத்து சுரை
 • பரங்கி சுரை

பரங்கிக்காய் வகைகள்:

 • வெள்ளை பரங்கி
 • குடுவை பரங்கி
 • தலையணை பரங்கி
 • ஆரஞ்சு நிற பரங்கி
 • பூசணிக்காய்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil