Navathaniyam in Tamil
நாம் பேசும் மொழியானது தமிழாக இருந்தாலும் கூட அதில் நிறையவற்றைக்கு நமக்கு சரியான அர்த்தங்கள் என்ன என்பது தெரியவில்லை. இவற்றை எல்லாம் விட நாம் தினமும் சாப்பிடும் பொருட்களின் பெயர்கள் கூட சரியாக தெரிவது இல்லை. தினமும் நாம் சாப்பிடும் அனைத்தும் சத்தானதாக இருக்க வேண்டும் என்று நினைத்து குழந்தைகளுக்கு அளிப்போம். ஆனால் அதனுடைய பெயர்கள் என்னவென்று நம்முடைய குழந்தைகளிடம் கேட்டால் அவரகளுக்கு சரியாக தெரிவது இல்லை. அதனால் இன்று பல வகையான சத்துக்களை கொண்டுள்ள நவதானியங்களின் பெயர்கள் பற்றியும் அதனையுடைய தகவல்கள் பற்றியும் தெரிந்துக்கொள்ள போகிறோம். இத்தகைய தகவல் ஆனது நம்மில் பலபேருக்கு தெரிவது இல்லை. அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
நவதானியங்கள் என்றால் என்ன..?
நவ என்பது எண்களின் அடிப்படையில் பார்க்கும் போது 9 என்ற எண்ணை குறிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் புது மாற்றங்கள் காணப்பட்டாலும் அது நவகிரங்களினால் என்று கூறப்படுகிறது. மேலும் நவரத்தினம் என்பது ஒன்பது வகையான ராசி கற்களை குறிக்கிறது.
அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தினை தரும் 9 வகையான தானியங்கள் தான் நவதானியம் என்று அழைக்கப்படுகிறது.
நவதானியங்கள் பெயர்கள்:
- நெல்
- மொச்சை
- எள்
- கோதுமை
- துவரை
- கொள்ளு
- உளுந்து
- கொண்டைக்கடலை
- பாசிப்பயிறு
நவகிரங்களுக்கு உரிய நவதானியம்:
- நெல்- செவ்வாய்
- மொச்சை- சுக்கிரன்
- எள்- சனி
- கோதுமை- சூரியன்
- துவரை- சந்திரன்
- கொள்ளு- கேது
- உளுந்து- ராகு
- கொண்டைக்கடலை- குரு
- பாசிப்பயிறு- புதன்
தினை வகைகள் மற்றும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. |
நவதானியங்கள் பயன்கள்:
நெல் (அ) அரிசி:
நாம் தினமும் சாப்பிடும் அரிசி ஆனது நெல்லில் இருந்து தான் கிடைக்கிறது. இத்தகைய அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.
இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை குறைய வைக்கவும், உடல் எடையினை குறைக்கவும் மற்றும் இதில் உள்ள சோடியம் ஆனது உடலின் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் செய்கிறது.
மொச்சை பயன்கள்:
வைட்டமின் C, வைட்டமின் D, வைட்டமின் B6, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புசத்து, கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் என நிறைய சத்துக்களை உள்ளடக்கியது.
மேலும் இதில் உள்ள சத்துக்கள் ஆனது மலச்சிக்கல், உடல் பருமன் குறைய மற்றும் புற்றுநோய் வராமல் இருக்க செய்கிறது. அதுபோல் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.
எள் நன்மைகள்:
எள்ளில் கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு வகையான எள்கள் உள்ளது. இதில் வெள்ளை எள்ளினை விட கருப்பு எள் தான் அதிக ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. மேலும் இதில் 10-க்கும் மேற்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.
கருப்பு எள்ளில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் B மற்றும் இரும்புசத்து ஆனது நரை முடி வருவதை தடுக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் மற்றும் ஞாபக சக்தியினை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.
கோதுமை:
நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் கோதுமையில் உள்ள நார்ச்சத்து, செலினியம் மற்றும் வைட்டமின் E ஆனது நம்முடைய உடலில் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி உடலின் இரத்தத்தினை சுத்தமாக வைக்க செய்கிறது.
துவரம் பருப்பு பயன்கள்:
பத்திற்கும் மேற்பட்ட துவரம் பருப்பினை வைத்து நிறைய வகையான சமையல்கள் செய்யப்படுகிறது. இதில் உள்ள புரதச் சத்தானது எலும்புகளில் காணப்படும் திசுக்களை பலம் பெற செய்ய உதவுகிறது.
அதுவே துவரம் பருப்பினை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு, வாயு தொல்லை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படகூடுகிறது.
கொள்ளு மருத்துவ குணம்:
பொட்டாசியம், இரும்புசத்து, நார்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் மற்றும் புரதசத்து ஆகிய சத்துக்கள் உள்ளது.
கொள்ளினை நாம் எடுத்துக்கொள்வதன் நம்முடைய இருக்கும் தேவையற்ற ஊளை சதையினை குறைக்க உதவுகிறது.
மேலும் சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனை மற்றும் மாதவிடாய் காலத்தில் வரும் அதிக இரத்த போக்கு இந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடச் செய்கிறது.
உளுந்து மருத்துவ பயன்கள்:
இதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்சத்து ஆனது நம்முடைய இதய ஆரோக்கியத்தினை மேம்பட செய்கிறது.
அதேபோல் உளுந்தில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து எலும்புகளை பலம் பெறச் செய்யவும், இரத்த அழுத்தத்தினை குறைக்கவும் உதவுகிறது.
கொண்டை கடலை:
கொண்டை கடலையினை பெண்கள் அதிகமாக சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயத்தினை குறைத்து அவற்றினை எதிர்க்கும் பண்பினை கொண்டிருக்கிறது.
இதில் இரும்பு சத்து இருப்பதால் பெண்கள் கொண்டை கடலையினை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்த ஆகியவற்றை போக்கி திடம்பட வாழச் செய்யும்.
பாசிப்பயிறு:
பாசிபயிரில் அதிக அளவு பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்சத்து, புரதம் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளது.
பாசிப்பயிறு ஆனது கர்ப்பிணிகளுக்கு ஏற்றதாகவும், அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டினை எளிதில் செரிமானம் அடையச் செய்யவும் பயனளிக்கிறது.
மேலும் முகம் மற்றும் முடிக்கும் சிறந்த ஒரு இயற்கை ரெமிடியாக இருக்கிறது.
உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா.. அப்போ அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |