Needle Fish in Tamil
அசைவ உணவுகளில் மீன் என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் முடிக்கும். அதேபோல் மட்டன் மற்றும் சிக்கனை போல் மீன் இல்லாமல் எண்ணற்ற வகைகளை கொண்டுள்ளது. அத்தகைய வகைகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மீன்களை பிடிக்கும். இவ்வாறு இருக்கையில் என்ன தான் மீன்களில் இருக்கும் வகைகளை பற்றி தெரிந்துக்கொண்டாலும் கூட அதனை பற்றிய முழு தகவலை நாம் அந்த அளவிற்கு தெரிந்துக்கொள்வது இல்லை. அதனால் இன்றைய பதிவில் மீன்களின் வகைகளில் ஒன்றாக உள்ள கடல் ஊசி மீன் பற்றிய தகவலை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
கடல் ஊசி மீன் பற்றிய தகவல்:
கடல் ஊசி மீன் என்பது ஒரு வகையான கடல் மீன் ஆகும். இத்தகைய ஊசி மீன்கள் பெலோனிடே என்ற குடும்பத்தை சேர்ந்த மீன் ஆகும். இதில் உள்ள பெரிய ஊசி மீன்கள் மற்ற சிறிய ஊசி மீன்களுக்கு உணவளிக்கிறது.
அதேபோல் ஊசி மீன்கள் ஒரே ஒரு முதுகு துடுப்பையும், 3 செ.மீ முதல் 95 செ.மீ வரை நீளமாகவும் வளரும் தன்மை உடையது. அதுமட்டும் இல்லாமல் இதனுடைய பற்கள் ஆனது மிகவும் கூர்மையுடன் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளது.
கடலில் வாழும் இந்த ஊசி மீன் ஆனது கடலின் மேற்பரப்பிற்கு வருவதை விட அதிகமான ஆழத்திற்கு செல்லும் சிறப்பு உடையது.
மீனவர்கள் கடலில் ஊசி மீன்களை பிடிக்க முயலும் போது அதனுடைய கூர்மையான பற்கள் ஆனது சுறாக்களை விட உடலில் அதிகப்படியான காயங்களை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இத்தகைய ஊசி மீன்கள் ஆனது நீளமான டாம்ஸ் மீன்கள் என்றும் அழைப்படுகிறது. ஊசி மீன்களுக்கு வயிறு என்பது கிடையாது.
இத்தகைய ஊசி மீன்களில் 60-ற்கும் மேற்பட்ட மீன்கள் இனம் காணப்படுகிறது. அந்த இனங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது.
உப்பு மற்றும் கடல் நீரில் வாழக்கூடிய இத்தகைய ஊசி மீன் தண்ணீரிலேயே பறக்கும் மற்றும் குதிக்கும் தன்மை உடையதாக உள்ளது. ஊசி மீனை நாம் உணவாகவும் எடுத்துகொள்ளலாம்.
- மீன் பெயர்: ஊசி மீன்
- இனம்: பெலோனிடே
- வேகம்: மணிக்கு 60 கிலோ மீட்டர்
- நிறம்: சாம்பல் நிறம், நீலம் மற்றும் வெள்ளி நிறம்
- ஆயுள் காலம்: 8 ஆண்டுகள்
- எடை: 4.5 கிலோ
- ஆங்கிலத்தில் மீனின் பெயர்- Needle Fish
மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |