நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட் பயன்பாடுகள் – Neurobion Forte Tablet Uses in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட்டின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.. நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட் சந்தைகளில் மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை என்றாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள கூடாது. சரி வாங்க Neurobion Forte Tablet Uses and Side Effects in Tamil பற்றி தமிழ் மொழியில் படித்தறியலாம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

Neurobion Forte Tablet Uses in Tamil:

பொதுவாக வைட்டமின் பி3, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இந்த நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட்டை எடுத்துக்கொள்ளலாம். இதனால் தங்களுடைய நரம்பு மண்டலம் பலம் பெறும். மேலும் ஆரோக்கியமான உடல் அமைப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

ஒருவருக்கு வைட்டமின் பி சத்து உடலில் குறையும் போது எது மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றால் இரத்த சோகை, மன அழுத்தம், முடி உதிர்வு, உடல் சோர்வு, உடல் அசதி, தோல் நோய், ஞாபக சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே உடலில் வைட்டமின் பி3, வைட்டமின் பி12 சத்துக்களை அதிகரிக்க நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட்டை மருத்துவர்களிடம் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்.

யாரெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்?

  • 50 வயது நிரப்பியவர்கள் இந்த மாத்திரையை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
  • சைவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
  • நீரிழிவு நோயாளிகள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

மாத்திரை அளவு:

உங்கள் உடல் நிலையை பொறுத்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று அதன்படி மாத்திரை அளவை எடுத்து கொள்ளுங்கள்.

நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட் பக்க விளைவுகள் – Neurobion Forte Tablet Side Effects in Tamil:

இந்த நியூரோபியன் ஃபோர்ட் டேப்லெட் எடுத்துக்கொள்வதினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இந்த மாத்திரையை தொடர்ந்து எடுத்து கொள்வதன் மூலம் உடல் நலம் நன்றாக இருக்கும்.

நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் பி1, பி2, பி3  பி5, பி6 மற்றும் பி12 போன்ற விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இந்த சத்துக்கள் இரத்த சோகை குணமாகும், இதயம், நரம்பு மண்டலம் போன்றவற்றை பாதுக்காக்க பயன்படுகிறது. வாய் புண், குடல் புண் போன்றவற்றையும் குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் மெட்டபாலிக் சத்தை அதிகரிக்க பயன்படுகிறது.

டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement