New ATM Card Request Letter in Tamil
பொதுவாக வங்கிக்கு செல்ல வேண்டும் என்று யோசித்தாலே அங்கு ஏதாவது பார்ம் அல்லது கடிதம் எழுத சொல்லுவார்களோ என்ற அச்சம் ஆனது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இத்தகைய அச்சமானது படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை என அனைவருக்கும் இருந்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு பார்க்கையில் ஆரம்ப காலத்தில் எல்லாம் கடிதம் எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த நவீன காலத்தில் அனைத்துமே மிகவும் எளிமையாகவும், அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒன்றாகவும் மாறிவிட்டது. அதிலும் தற்போது எல்லாமே இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்ட காரணத்தினால் எப்படிப்பட்ட விஷயத்தையும் எளிமையாக செய்து முடித்து விடுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இன்டர்நெட் வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கு இவை எல்லாம் சற்று கடினமாக தான் இருக்கும். அதனால் இன்று பேங்கில் புதிய ATM கார்டு அப்ளை செய்வதற்கு எழுத வேண்டிய விண்ணப்பத்தை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
புதிய ஏடிஎம் கார்டு விண்ணப்பித்தல் கடிதம்:
அனுப்புநர்:
S. ராம்,
எண். 25, நடராஜ நகர்,
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம்,
Pin code- 613001
மொபைல் எண்: 1236784590,
வங்கி கணக்கு எண்: 547163890.
பெறுநர்:
கிளை மேலாளர்,
இந்தியன் வங்கி,
தஞ்சாவூர் கிளை,
தஞ்சாவூர் மாவட்டம்.
பொருள் : புதிய ஏடிஎம் கார்டு வழங்க கோரி கடிதம்.
மதிப்பிற்குரிய ஐயா,
நான் நமது வங்கிக்கிளையின் நீண்ட நாள் வாடிக்கையாளர். எனது சேமிப்பு கணக்கு எண்: 547163890 ஆகும். இவ்வாறு இருக்கையில் பண பரிவர்த்தனை செய்யவும், மற்றும் பணித்தினை எளிய முறையில் எடுக்கவும் எனக்கு ஒரு ATM கார்டு இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆகவே இந்த கிளையில் உள்ள எனது சேமிப்பு கணக்கிற்கு ஒரு புதிய ATM கார்டு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாள்: 26.10.2023.
இடம்: தஞ்சாவூர்.
தங்கள் உண்மையுள்ள,
S. ராம்.
நன்றி.
புதிய ஏடிஎம் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
மேலே எழுதியுள்ள கடிதத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில ஆவணங்களின் ஜெராக்ஸையும் இணைத்து கொடுக்க வேண்டும்.
- ஆதார் கார்டு
- வங்கி கணக்கு புத்தகம்
- பாண் கார்டு
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |